கோவை பந்த்துக்கு அண்ணாமலை அழைப்புவிடுக்கவில்லையாம்.. ஹைகோர்ட்டில் கொடுத்த விளக்கம்
சென்னை: கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பை கண்டித்து பாஜக சார்பில் அக்.31ல் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்ட பந்த்-க்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மனு
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்த்-க்கு ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருகின்றனர்.
இந்த விவகாரம் ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது.

விசாரணை
எனவே வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று பிற்பகல் இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

அண்ணாமலை விளக்கம்
தொடர்ந்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், அக்.31ல் கோவையில் முழு அடைப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கவில்லை. முழு அடைப்பு அழைப்பு விடுத்தது சிபி ராதாகிருஷ்ணன் என்ற தனிநபர் தான். செய்தியாளர் சந்திப்பில் சிபி ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.

நீதிபதிகள் கருத்து
இதன்பின்னர் கோவையில் பந்த் நடத்தினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அக்.31ல் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு அண்ணாமலையின் வழக்கறிஞர் தான் பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படாமல், விசாரணை வரும் நவ.1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications