டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது.. மடியில் கனமில்லை.. பார்ட் 10 வந்தாலும் பயமில்லை.. சேகர்பாபு
சென்னை: எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்றைய தினம் சென்னை பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை கட்டிடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையம் அமைக்கப்படவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, 2021 - 2022ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் மலைக் கோயில்கள் மற்றும் பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்ற திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கிடும் வகையில் 10 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த ஆண்டிலேயே 10 மருத்துவ மையங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.

அதனை தொடர்ந்து 2022 - 2023 ஆம் ஆண்டில் 5 மருத்துவ மையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன. இதுவரையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோயில்களில் 15 மருத்துவ மையங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. 2023 -2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் புதிதாக 2 மருத்துவ மையங்களை அறிவித்திருக்கின்றோம். ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், சென்னை, தம்புச்செட்டித் தெருவில் திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட இடத்தில் கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இன்று ஆய்வு செய்யப்பட்டிருக்கின்ற சுமார் 2,652 சதுரடி பரப்பளவு கொண்ட இடமானது திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அவர்களால் மருத்துவமனை அமைப்பதற்காக உயில் எழுதி வைக்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு இங்கு மருத்துவமனையை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த இடத்தினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 13-க்கும் மேற்பட்ட வணிக கடைகளாக பிரித்து மேல் வாடகைக்கு விட்டிருந்தார். சென்னை மண்டல இணை ஆணையர் அவர்களால் சட்டப்பிரிவு 78 - இன் படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புதாரர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, சாமுண்டீஸ்வரி அம்மாள் உயிலாக எழுதி வைத்த இடத்தில் மீண்டும் மருத்துவமனை அமைத்திட உள்ளோம் என தெரிவித்தவுடன், எதிர் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்து இந்து சமய அறநிலையத்துறை வசமே இடத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான இந்த இடத்தில் காளிகாம்பாள் திருக்கோயில் மற்றும் கந்தக்கோட்டம் திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திடும் வகையில் மருத்துவ மையம் விரைவில் அமைக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், இதுவரை ரூ.4,874 கோடி மதிப்பீட்டிலான 5,273 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார்.
ஆளுநரை சந்தித்து அண்ணாமலை அளித்த புகார் மனுக்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,
அண்ணாமலை கூறியிருக்கின்ற புகார்கள் எவை எவை என்று தெரிந்த பிறகு அதற்கு முழுவதுமாக பதில் சொல்ல திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கின்றது. எங்களுக்கு மடியிலே கனமில்லை அதனால் வழியிலே பயமில்லை. பார்ட் 2 அல்ல, பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட வருத்தப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. டிரங்க் பெட்டியில் என்ன இருந்தது என்பதை அதை கொடுத்தவரிடமும், பெற்றுக் கொண்டவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை அவர்கள் உடலை சீராக வைத்துக் கொள்வதற்காகவோ, மருத்துவர்களின் ஆலோசனைபடியோ நடை பயணத்தை மேற்கொள்கிறாரோ? தெரியவில்லை. ஆனால் நடை பயணம் மட்டுமல்ல எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமையப் போகின்ற கூட்டணி தான் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் நடை பயணத்திற்கு வாழ்த்துகள் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications