Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

27% அல்ல 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவே உத்தரவிட்டோம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக இட ஒதுக்கீட்டு சட்டப்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது எனத்தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

We have ordered implementation of 69% reservation not 27%: High Court seeks explanation from Central Government

தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

திமுகவின் வழக்கு 1993-ம் தமிழக சட்டத்தின் படி மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தேவை என்பது.

2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் 1993-ம் ஆண்டு தமிழக சட்டப்படி அகில இந்திய கோட்டாவில் ஓபிசிக்கு 50% நிறைவேற்ற வேண்டும்- சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்பதுதான்.

இதனை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தப்பிக்க 27% ஓபிசிக்கு இடஒதுக்கீடு என்றது. ஆனால் விடாத திமுக 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டதை நிறைவேற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

குழு பரிந்துரை அடிப்படையிலேயே 27% மத்திய அரசு

அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், "உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை" எனத் தெரிவித்தார்.

69% இட ஒதுக்கீடு குறித்துத்தான் உயர் நீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டது-வில்சன்

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் "தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என தமிழக அரசின் இட ஒதுக்கீடை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.

மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டுமே 27% இட ஒதுக்கீடு பொருந்தும்

மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதை, மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன" என வாதிட்டார்.

என்ன சொன்னோம் என்ன செய்துள்ளீர்கள் நீதிபதிகள் கேள்வி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தெரிவித்தனர்.

10% கிரீமி லேயர் விளக்கம் தாருங்கள்-நீதிபதிகள்

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா ? இல்லையா? எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+