எங்களுக்கு ‛பீப்’ பிடிக்கும் கமலாலயத்தில் சமைச்சு தருவீங்களா? அண்ணாமலைக்கு, ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி
சென்னை: பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்து தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்த காங்கிரஸை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்தார். தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என அவர் கூறிய நிலையில் தங்களுக்கு ‛பீப்' பிடிக்கும். மாட்டிறைச்சி சமைத்து வையுங்க எனக்கூறி ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசாவில் இன்னும் லோக்சபா தேர்தல் முடிவடையவில்லை. இன்னும் 12 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 6 தொகுதிக்கும், ஜுன் 1ம் தேதி இன்னொரு 6 தொகுதிக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்'' என தெரிவித்து இருந்தார்.
ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தளம் கட்சியில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த விகே பாண்டியன் உள்ளார். இந்நிலையில் தான் விகே பாண்டியனை மறைமுகமாக குறிப்பிட வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி இப்படி பேசினார்.
இந்நிலையில் தான் தமிழர்களை திருடர்கள் என பொருள்படும்படி பிரதமர் மோடி பேசிவிட்டதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், தமிழகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என அறிவித்தார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்'' என்றார். அதாவது காங்கிரஸ் கட்சியில் ஆட்கள் இல்லை. குறைந்த அளவிலானவர்கள் தான் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதை தான் மறைமுகமாக அண்ணாமலை கிண்டல் செய்தார்.
இந்நிலையில் தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் ‛‛கமலாலயத்தை முற்றுகையிடும் தேதியை கூறினால் உணவு சமைத்து தருவதாக அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன்: ‛‛எங்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும். மாட்டிறைச்சி பிடிக்கும். அதனால் நாங்கள் செல்லும் நேரத்தை சொல்லிவிட்டு 2 நாட்கள் நேரம் கொடுக்கிறோம். அவர்கள் சமைத்து தர வேண்டும்'' என பதிலடி கொடுத்தார். மாட்டிறைச்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வரும் நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்படி தெரிவித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications