“லவ் யூ ஸ்டாலின் சார்.. இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி”.. உணர்ச்சி பொங்க பேசிய மாற்றுத்திறனாளி!
சென்னை: "இந்தியாவிலேயே முதல் முறையாக கிட்டத்தட்ட 15,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலர்கள் ஆகப் போகிறார்கள்.. We love you Stalin sir.." உணர்ச்சி பொங்கப் பேசி இருக்கிறார் டிசம்பர் 3 இயக்கத் தலைவர் தீபக்நாதன்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள், புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும் என இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பதவி
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகை செய்யும் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவுக்கு மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் நாதன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தார்.
தீபக் நாதன் உருக்கமாக பேச்சு
தீபக் நாதன் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று பல நேரங்களில் நாங்கள் பொருமியதுண்டு. மனதில் வருத்தங்கள் உண்டு. கிராமப்புறங்களில் ஒரு கழிவறை இல்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கழிவறை இல்லையே என்றும் இது ஏன் இங்கு இல்லை என்று நாங்கள் அடிக்கடி எங்களுக்குள்ளேயே கேள்விக் கேட்டுக் கொள்வோம். அப்போது இதையெல்லாம் முடிவு எடுக்கும் இடத்தில் மாற்றுத்திறனாளிகள் இல்லாமல் இருப்பதால்தான் என்பது புரியும். கண்ணில் படாத வரைக்கும் நெஞ்சத்தில் நிலைக்காது என்று சொல்வார்கள்.
அந்த வழியில் நாங்கள் எல்லாமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக அணுகத்தக்க விஷயங்களாக மாற வேண்டும் என்றால், முடிவு கேட்கின்ற இடத்திலிருந்து - கொடுக்கின்ற இடத்திற்கு வரவேண்டும். அப்படி நடந்தால்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகத் தக்கதாக விஷயங்கள் மாறும் என்று நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தோம்.
வரலாற்றில் முக்கியமான நாள்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இந்தியாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்காக அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கை சரத்து 29 உச்சரித்து மிகத் தெளிவாக சொல்கிறது. மாற்றுத்திறனாளிகள் எங்கு வரவேண்டும்.... முடிவெடுக்கும் இடத்திற்கு வந்தால் தான், அவர்கள் உரிமை உண்மையாகும். உரிமைகள் உண்மையாக வேண்டுமென்றால் அவர்கள் பக்கத்திலேயே இருக்கக் கூடிய Local Government-இல் அவர்கள் உறுப்பினர்களாக மாற வேண்டும். மாறினால் தான் மாற்றங்கள் வரும் என்பதை ஐநா சபையின் Incheon Strategy 2012 மற்றும் 2023 மிகத் தெளிவாகச் சொல்கிறது.
இதையெல்லாம் கோடிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்கின்ற பொழுது இந்தியாவின் முதல் முறையாக கிட்டத்தட்ட 15,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலராக போகிறார்கள். இதுதான் இங்கு மிகப் பெரிய விஷயம். தேர்தலில் நிற்காமல் Community-based rehabilitation (CBR) மூலமாக ஆகப்போகிறார்கள்.
மிகப்பெரிய விஷயம்
அதாவது, அவர்கள் வாழ்கின்ற இடத்திலேயே மறுவாழ்வு கொடுக்க வேண்டும். அவர்களின் பகுதியில் ஒரு வீல் சேர் வாங்க வேண்டும் என்றால் நாங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருந்து மாவட்டத்தின் தலைநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். ஆனால், இந்த விஷயங்கள் நடைமுறைக்கு வருகின்ற பொழுது எங்களுடைய வீல்சேரை எங்களுடைய பஞ்சாயத்திலேயே வாங்கும் வாய்ப்பினை இந்த அறிவிப்பும், இந்த சட்ட திருத்தத்தமும் உண்மையாக்க போகிறது. அதுதான் இதில் மிகப்பெரிய விஷயம்.
ஏனென்றால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இதை முதலில் பேசினார். தனது முதல் பேச்சிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். இப்போது, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி இத்தனை இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நிற்காமலேயே பதவிக்கு வரப்போகிறார்கள். ஆட்சி அதிகாரங்களில் எங்களுடைய குரல்கள் ஒலிக்கப் போகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
வார்த்தைகளால் சொல்ல முடியாது
இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை இந்த அரசு தொடங்கி வைத்திருக்கிறது. மற்றவை எல்லாம் அரசியலாக இருக்கலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் குறித்து - தந்தை பெரியார் ஷ்யாவுக்கு செல்லும்போது மிகத் தெளிவாக சொன்னார்களாம். உங்களது சிறைச்சாலை எப்படி இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டும். அதை எப்படி நீங்கள் பராமரிக்கிறீர்களோ.. அதை வைத்து தான் இங்கு அரசு எப்படி நடைபெறுகிறது என்பதை எடை போடுவேன் என்று கூறினார்களாம். இன்றைக்கு தந்தை பெரியார் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பார். நிச்சயம் கேட்பார்.
அப்படி பார்க்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரையில் ஒரு சாய்வு பாதை. அதை நாங்கள் கேட்டுக் கேட்டு வாங்கினோம். அப்பொழுது இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருவர் ரிப்பன் மாளிகையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கவுன்சிலராக பேசப் போகிறார் என்ற அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
சமூக நீதி 360 டிகிரி
எவ்வளவு தூரம் நாங்கள் போராடி வந்திருக்கிறோம் என்றால், இந்த நகராட்சி உள்ளாட்சி சட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஒரு சரத்து இருந்தது. அதை முதலில் எடுத்தோம். பிறகு மாற்றுத்திறனாளிகள் நிற்க முடியும் என்று பெற்றிருக்கிறோம். இப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்காக பதவி வாங்கி இருக்கிறோம். இது நீண்ட நெடிய போராட்டத்தில் அற்புதமான விஷயம். இதை உறுதியாக்கிய, சாத்தியமாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, உடலால் ஊனமுற்றவர்களுக்கான நீதியும் சேர்த்து வழங்கினால் தான் அந்த சமூக நீதி 360 டிகிரி வரும். இன்றைக்கு 360 டிகிரியை இந்த அரசு தொட்டிருக்கிறது.
இனி 50 ஆண்டு காலம் - நூறு ஆண்டு காலத்திற்கு இந்தியாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை ஐநா சபை சொல்லியிருக்கக் கூடிய அந்த விஷயத்தை இன்றைக்கு உறுதியாக்கி உண்மையாக்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உணர்ச்சி பொங்க நன்றி
Thank You So Much Stalin Sir..... We Love You Sir..... Thank You is a small word Sir. நன்றி சொன்னால் போதாது அய்யா... எங்களது கடைக்கோடி மாற்றுத்திறனாளி ஒருவர் பேசுவது என் கண்ணில் தெரிகிறது. அதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை இந்த வரலாறு சொல்லும்." என உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications