Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புளியந்தோப்பு கட்டிட முறைகேடு: யாரா இருந்தா என்ன? பிளாக்லிஸ்ட் பண்ணுங்க.. அமைச்சர் அன்பரசன் பளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புளியந்தோப்பு கட்டிட முறைகேடு தொடர்பான விசாரணையில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், விரைவில் இதில் பிளாக் லிஸ்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அபாய நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு... 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

    கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது சர்ச்சையில் இருக்கிறது. குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், ஏற்கனவே அங்கு பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கி இருந்தவர்களுக்கும் மாற்று வீடாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் இங்கு அடுக்குமாடி புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த வீடுகள் சரியான தரத்தில் இல்லை, வீடுகள் கட்டப்பட்டு இரண்டு வாரத்திலேயே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு வீடுகள் மோசமாக இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டது.

    கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடுகள் குறித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக விசாரணையில் குதித்தது. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்று ஆளும் திமுக தரப்பு கருதியதால் நேற்று அவையிலும் இதை பற்றி விவாதிக்கப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகிய இரண்டு பேரும் புளியந்தோப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்த புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் திட்டப்‌ பகுதியில்‌ கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்‌ மிகவும்‌ மோசமான நிலையில்‌ உள்ளன. இங்கு சிமெண்ட் பூச்சுகள், சுவர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. இவரை தரமற்று கட்டுப்பட்டு உள்ளது.

    பணிகள் எப்படி

    பணிகள் எப்படி

    இந்த பணிகள் ரூ.112.60 கோடி செலவில்‌ திட்டமிடப்பட்டது. 864 குடியிருப்புகள்‌ ஜனவரி 2018ஆம்‌ ஆண்டு கட்டுமானப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டு, 2019ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ வேகமாக பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடம் கொரோனா மையமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கே.பி.பூங்கா அருகில்‌ தற்காலிகக் குடியிருப்பில்‌ இருந்தவர்கள் இங்கே குடியேறினார்கள். இவர்கள் இந்த கட்டிடம் தரமற்று இருப்பதாக கூறிய நிலையில், அங்கு ஆய்வு செய்தோம். இந்த புதிய கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் தரமற்று கட்டப்பட்டு இருக்கிறது, என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்து இருந்தார்.

    பேட்டி

    பேட்டி

    இந்த நிலையில்தான் நேற்று புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் குறித்து திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கட்டிடம் மிக வேகமாக கட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் கூட தரமில்லை. தொட்டா சிணுங்கி போல தொட்டால் விழுந்துவிடும் வகையில் கட்டிடத்தை கட்டி உள்ளனர். இது மக்களுக்குத்தான் ஆபத்து.இதில் முறைகேடு நடந்தது தெளிவாக தெரிகிறது, கடந்த ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை விசாரிக்க வேண்டும். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இன்று முடிவு

    இன்று முடிவு

    இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு இதில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது. முக்கியமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தீவிரம் காட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கட்டுமானம் குறித்து நிறைய புகார்கள் வருகின்றன. நாங்கள் நேரடியாக செய்த ஆய்விலும் கட்டுமானம் தரமற்று இருப்பது தெரிய வந்தது. இந்த கட்டுமானம் தரமற்று இருப்பது ஐஐடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    அந்த நிறுவனம் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்று கூறியுள்ளார். பிளாக்லிஸ்ட் என்றால் இனி அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்படாது. இந்த குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் நிறுவனம் இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. கட்டுமானம் குறித்து தவறான செய்தி பரபரப்படுவதாக PST கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த நிறுவனத்தின் மற்ற சில கட்டுமானங்கள் குறித்தும் விசாரிக்கும் முடிவில் அரசு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இவர்களுக்கு எப்படி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்றும், மற்ற குடிசை மாற்று வாரிய வீடுகளில் சென்ற ஆட்சியில் முறைகேடு நடந்து இருப்பது குறித்தும் விசாரிக்கும் முடிவில் அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக உண்மை கண்டுபிடிக்கப்பட்டால். முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+