சூர்யாவிடம் 5 கோடி கேட்டது, நிஜ செங்கேனி பார்வதிக்கு கொடுக்கத்தான்..! அடடே பாமக..!
சென்னை: நடிகர் சூர்யாவிடம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இழப்பீடாக பெறும் ரூ 5 கோடியை ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு கொடுப்போம் என பாமக செய்தித் தொடர்பாளர் கே பாலு தெரிவித்தார்.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தினரை தவறாக சித்தரித்ததாக வன்னியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்ட போதிலும் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாயை அபராதமாக வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்திற்குள் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா
இதற்கு வன்னியர் சங்கத்தை பலர் கண்டித்துள்ளார்கள். அதே வேளை சூர்யாவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஜெய் பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நுழைவு வாயிலில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ஜோதிகா
அப்போது பேசிய அவர், இழப்பீடு தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரும் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படத்தின் மூலமாக பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்கள். நாங்கள் கேட்டு வரக்கூடிய இழப்பீடு முழுவதையும் உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு மொத்தமாக வழங்குவோம்.

படத்துறையினர்
நாங்கள் சொல்லி 24 மணி நேரம் ஆகியும் தற்போது வரை படக்குழு தரப்பிலிருந்து எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. படத்துறையினர் இணக்கமாக இருக்கும்போது, சூர்யா எதிர்கொள்ளும் விதம் வேறுவிதமாக உள்ளது. எங்கள் உணர்வுகளை இயக்குனர், நடிகர் சூர்யா புரிந்து கொள்ளவில்லை.

விளக்கம் அளிக்கவில்லை
மேலும் பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டிய படக்குழு தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. விளக்கமளிக்க தயாராகவும் இல்லை. காட்சிகளில் இடம்பெற்றவை எப்படி வைக்கப்பட்டது என்பதை இயக்குனரும், நடிகரும் விளக்க வேண்டும். அதை அவர்கள் இருவருமே செய்யவில்லை. வன்னியர் சங்கத்தினர் மீது தொடர் கேள்விகள் எழும்போது, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரிடம் ஏன் எழுப்பவில்லை என பாமக செய்தி தொடர்பாளர் பாலு குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications