தமிழகத்தில் பிரசாரத்தை முடிக்காத "வெயில்".. 10 மாவட்டங்களில் இன்று "சதம்".. வானியல் மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும், பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை இன்றும் தாண்டும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து கொண்டு இருக்கிறது. கோடை காலம் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் கூட தொடங்கவில்லை.ஆனாலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று 10 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.
இந்த நிலையில் இன்றும் இந்த 10 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும். கூடவே அனல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
முக்கியமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அதிகரிக்கும். இதனால் தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications