தமிழ்நாட்டில் மொத்தம் 16 மாவட்டங்களில்.. செம மழை காத்திருக்கு! உங்க ஊர் இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் சுமார் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamil News June 15 | காலை முக்கியச்செய்திகள் | #NewsWrap

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடைக் காலத்தில் பெரியளவில் வெப்பம் இல்லை. அசானி புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து.

    இப்போது தென் மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

     வானிலை மையம்

    வானிலை மையம்

    கோடைக் காலம் குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் (ஜூன் 13,14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

     நாளை மறுநாள்

    நாளை மறுநாள்

    நாளை மறுநாள் (ஜூன் 15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மழை

    மழை


    அதைத் தொடர்ந்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) 7 செமீ மழையும், ஒகேனக்கல் (தருமபுரி) 6 செமீ மழையும், காரைக்குடி (சிவகங்கை) 5 செமீ மழையும் பெய்துள்ளது.

    சென்னை

    சென்னை

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இன்று முதல் ஜூன் 17 வரை இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல ஜூன் 14இல் கர்நாடக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+