அடுத்த 2 நாட்கள்.. தமிழகத்தில் வெயில் சதத்தை தாண்ட போகிறது.. கவனம்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக அதிக அளவிற்கு வெப்பம் இருக்கும் இருக்கும், அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் தினமும் அதிகரிக்கிறது. நேற்று 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது.

இந்த நிலையில் இன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.
இன்றும் இந்த 9 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. முக்கியமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் சுமார் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பு இல்லை.
முக்கியமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாண்டி வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள் , வட தமிழகம், மத்திய தமிழகத்தில்தான் வெயில் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
பல இடங்களில் அனல் காற்றுடன் கூடிய வெயில் அடிக்கும். இதனால் மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.
மேற்கு மாவட்டங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications