சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் செம சூடா இல்ல அதிர்ஷ்டவசமான மழையா.. ஓரிரு நாளில் தெரியும்.. வெதர்மேனின் நற்செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்கள் வரை மிகவும் அரிதான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை - வீடியோ

    தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. இந்த மழை முழுக்க முழுக்க தென் மாவட்டங்களுக்கே பலனை அளிக்கிறது.

    கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்வது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என பார்த்து பார்த்து கண்கள் பூத்துவிட்டன.

    தக தக அக்னியை அணைத்த கனமழை.. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழைதக தக அக்னியை அணைத்த கனமழை.. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை

    நன்றி

    நன்றி

    இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் மழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்களை வரை மிகவும் அரிதான மழை பெய்யும். காற்றழுத்த மேலடுக்கு சுழற்சிக்கு நன்றி சொல்வோம்.

    2 அல்லது 3 நாட்களில்

    2 அல்லது 3 நாட்களில்

    புதுவை- கடலூர்- டெல்டா- தென் தமிழகம் வரை இன்று நல்ல மழை பெய்யும். நாளை முதல் காற்று மேலடுக்கு சுழற்சி மறைந்து போகும். சென்னையில் இன்று அடர்த்தியான மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன. அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் வெப்பம் குறையும். சென்னையில் மழை பெய்யுமா இல்லையா என்பது இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தெரியும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    மழை

    மழை

    ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் புதுச்சேரியிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அக்னியின் வெப்பத்தை தணிக்கும் இந்த மழையை மக்கள் வரவேற்கிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை

    தென்மேற்கு பருவமழை

    மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை கேரளம், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு பலனை கொடுக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Tamilnadu Weatherman Pradeep John says that Chennai great heatless summer to continue for some few more days. Today lot of puffy clouds will be seen. Next week options open - Semma Soodu ah illa some lucky rains ah, we will come to know in 2-3 more days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X