அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு வாரம் 6 போன் கால்; உதவிக்கு வந்த கனிமொழி அம்மா: சார்மிளா Open talk
சென்னை: மலையாள நடிகை சார்மிளா தன்னை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் இடமிருந்து எப்படி தப்பி வந்தேன் என்றும், அவர்களை தண்டிக்க முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மையார்தான் உதவினார் என்றும் கூறியுள்ளார்.
நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள சினிமா துறையைக் கதிகலங்க வைத்துள்ளது. அதன் எதிரொலியாகக் கடந்த வாரம் 'அம்மா' சங்கத் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் விலகினார். அவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். இந்த கமிட்டியின் அறிக்கை பற்றி கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த மம்மூட்டி இரண்டு நாட்கள் முன்னதாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பல பெண்கள் நீதிபதி ஹேமா கமிஷன் முன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் கேரள நடிகர்கள் சங்கம் பெண்களுக்குப் பாதுகாப்பு தர தவறி இருக்கிறது என்றே கமிஷன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பற்றிய செய்தி வெளிவந்ததிலிருந்து மலையாள நடிகைகள் சிலர் வெளிப்படையாக தாங்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றிப் பேச தொடங்கி உள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சார்மிளா. இவர் தனக்கு நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி பேசிய பேச்சு கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சார்மிளா மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர். அவர் இப்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் தனக்கு நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார்.
அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர்களுடன் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர்களால் எனக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. 'காலம் மாறி போச்சு' தமிழ்ப் படத்தை மலையாளத்தில் எடுத்தார்கள். அதை புதிய தயாரிப்பாளர் ஒருவரும் புதிய இயக்குநர் ஒருவரும் சேர்ந்து எடுத்தார்கள். அதில்தான் பிரச்சினை ஆரம்பமானது. படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே 'அட்ஜஸ்ட்மெண்ட்' செய்வீர்களா? இல்லையா என கோரிக்கையை வைத்து விடுவார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் முதல் கட்டப் படப்பிடிப்பைச் சரியாக நடத்தினார்கள். ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு. இரண்டு நாட்கள் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதுவரை யாரும் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை. படப்பிடிப்பு முடிந்து மூட்டைக் கட்டும் நேரம்.
அப்போதுதான் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தவறாக நடக்க முயன்றார்கள். அப்படத்தின் மேனேஜர் சண்முகம் என்பவரிடம் நான் புறப்படுவதாகச் சொல்லிவிட்டேன். அவர் தயாரிப்பாளரை மரியாதைக்கு ஒருமுறை பார்த்துச் சொல்லிவிட்டு போங்கள் என்றார். நான் என் உதவியாளர்களுடன் போனேன். மாடி அறையிலிருந்தார்கள். உள்ளே போனால் சிலர் தண்ணீர் அடித்துக் கொண்டு இருந்தார்கள். என் உடன் ஒரு பெண் உதவியாளர் இருந்தார். அவரையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள். அடுத்து என் புடவையைப் பிடித்து இழுத்தார்கள். என் ஆண் உதவியாளர் தடுத்தார். அவரைப் போட்டு அடித்தார்கள்.
என்னைப் பலவந்தமாகத் தாக்கியவர் கையை கடித்துவிட்டுவிட்டு ஹோட்டல் வரவேற்பு அறைக்கு வந்து போன் செய்யலாம் என கேட்டேன். உடனே அவர் போன் செய்ய அனுமதி இல்லை என மறுத்துவிட்டார். வெளியேற முயன்றேன். உடனே ஷட்டரை இழுத்து மூட முயன்றார்கள். உடனே அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் வந்து உதவி கேட்டேன். அப்போது அடைக்கலராஜ் எம்பி எனக்கு மாமாதான். அவர் வீட்டுக்குப் போகவேண்டும் என்றேன்.
உடனே ஆட்டோ டிரைவர்கள் என்னை விசாரித்தனர். உடனே நடந்ததைச் சொன்னேன். அவர்கள் அங்கே போய் வருவதற்குள் தப்பிவிடுவார்கள் என்று அவர்களே ஹோட்டலுக்கு வந்து தகாத முறையில் நடந்தவர்களை உதைத்து அறையில் பூட்டி வைத்தார்கள். என் அப்பாவுக்கு போன் மூலம் விசயத்தைச் சொன்னேன். அவர் ராஜாத்தி அம்மாவுக்கு போன் செய்து உதவி கேட்டார். உடனே மறுநாள் காவல்துறையினர் வந்து அந்தக் கும்பலை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்.
அப்படித்தான் அன்றைய சினிமா இருந்தது. எனவேதான் குறைவான படங்களில் நான் நடித்தேன்.
அடுத்த நாளே அவர்களைக் கேரளா காவல்துறையில் ஒப்படைத்தார்கள். அவர்களை நான் சும்மா விடவில்லை. அடுத்த நாளே தண்டனை தர வைத்துவிட்டேன். அன்று நடத்த விவகாரத்தை இப்போது ஏன் சொல்கிறீர்கள்? என சிலர் கேட்கிறார்கள். அன்றைக்கு ஹேமா கமிட்டி போன்று முறையிட ஒரு அமைப்பு எங்களுக்கு இல்லை. இன்றைக்கு அரசு அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. எனவே பேசுகிறோம். இதே என் காலத்தில் எல்லாம் நடிகைகளைத்தான் தப்பாகப் பேசுவார்கள். காவல்துறைக்குப் போனால், நீங்கள் என்ன உடை போட்டு இருந்தீர்கள்? எப்போது போனீர்கள்? இரவு என்றால், ஏன் அந்த நேரத்தில் போக வேண்டும்? இப்படிப் பல கேள்விகளைப் பாதிக்கப்பட்ட எங்களிடம்தான் கேட்பார்கள்.
இப்போதுகூட தினமும் வாரத்தில் இதைப் போன்று அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என்று 6 போன்கள் வருகின்றன. நான் தமிழ் சினிமாவில் குறைவான படங்களைத்தான் நடித்தேன். அதற்குக் காரணம், ஹீரோயினாக இருந்தாலும் கிளாமர் உடை போட சொல்வார்கள். ஸ்விமிங் பூல் டிரெஸ் போடச் சொல்வார்கள். அப்படித்தான் அன்றைய சினிமா இருந்தது. எனவேதான் குறைவான படங்களில் நான் நடித்தேன்.
மலையாளத்தில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. புடவை கட்டி நடிக்கலாம். தமிழ் அளவுக்கு கிளாமர் அங்கே இல்லை. எனவே அதிகம் நடித்தேன். ஆனால், தமிழில் 9 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளேன். இதுவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. யாரும் என்ன தரக்குறைவாகவோ பாலியல் ரீதியாகச் சீண்டவோ இல்லை. எனக்கு நல்ல டீம் கிடைத்தது" என்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications