ஆடி திருவிழா வீக் எண்ட் லீவு.. சொந்த ஊர் போறவங்களுக்கு குட் நியூஸ்.. ஸ்பெஷல் பஸ்.. நெரிசல் இருக்காது
சென்னை: வார விடுமுறையை ஒட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலை காரணமாகவும், படிப்பு காரணமாகவும் பல்வேறு மக்கள் வெளியூர்களில் தங்கி வருகின்றனர். பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடி மாதம் என்பதால் தற்போது கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பயணம் செய்கின்றனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் ரிசர்வேசன் முடிந்து விடுகிறது. தட்கல் டிக்கெட் கட்டணமும் ஆயிரக்கணக்கில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் அதிகம் நம்பியிருப்பது அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை மட்டுமே. எனவே பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் இந்த பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அசௌகரியத்தை தவிர்க்க, முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications