மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதா?.. குறும்படம் வெளியிட்ட காவல்துறை
சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தின் மீது கற்கள்,கட்டைகள் கொண்டு தாக்கப்பட்டதாக ராஜ்பவன் புகார் அளித்த நிலையில் இது பொய்யான தகவல் என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்ப்பட்டுள்ளது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியது பற்றி எரிகிறது. இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க மயிலாடுதுறையில் நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது ராஜ்பவன். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஆளுநர் ரவி மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த டிஜிபி சங்கர் ஜிவால் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றினை வெளியிட்டார். ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்குகூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சங்கர் ஜிவால், இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.மேலே குறிப்பிட்டுள்ளதுபோல எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புக்காக சர்தார்படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன்இருந்த காரணத்தாலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாககுற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநருக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications