மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையத்தின் அறிவிக்கை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இலேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் குமரி இரணியலில் 6 செ.மீ மழையும் பொன்னமராவதியில் 4 செ.மீ, தேவலாவில் 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் ஆந்திரா கடலோர பகுதி, லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் . இவ்வாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications