விலைவாசி உயர போகுது.. மார்க்கெட் கதற போகுது.. வேலை வாய்ப்பும் சிக்கல்.. உலகப்போர் வருது? உஷார்
சென்னை: சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு பக்கம் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் உச்சம் எடுக்கப்பட உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதில் நேரடியாக அல்லது மறைமுகமாக தலையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகப்போர் மூளும் அபாயம்: ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் முற்றியது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த முடிவு செய்து உள்ளது.
இந்த வாரம்.. பெரும்பாலும் திங்கள் கிழமைக்குள் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் சேர்த்து கண்டிப்பாக உலகப்போரை உருவாக்கும் அபாயமே உள்ளது. ஒருவேளை உலகப்போர் வந்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. உலக அளவில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
1. உலக அளவில் மார்க்கெட் சரியும். பல நாடுகளில் மார்க்கெட் ரத்த களரியாக மாறும். இதனால் மார்க்கெட் அப்படியே போரில் கலந்து கொள்ளாதநாடுகளிலும் மோசமான விளைவுகளை சந்திக்கும்.
2. இதன் விளைவாக விலைவாசி உயரும். பல நாடுகளில் விலைவாசி கண்டிப்பாக உச்சத்தை தொடும்.
3. வேலை வாய்ப்பு மோசமான நிலையை அடையும். ஏனென்றால் மார்க்கெட் மோசமாக சரிந்தால்.. 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றால் கண்டிப்பாக அது மந்தநிலையை உருவாக்கும். அப்படி நடந்தால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு சரியும்.
4. புதிய தீவிரவாத அமைப்புகள், புதிய உலக ஆர்டர் உருவாகும்.
5. எண்ணெய் விலை உயரும்.
6. இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும்.
7. பயணம் செய்வதற்கான முறைகள் மாறும். விலை உயரும்.
8. உலகப்போர் வந்தால் தற்போது உலகில் கோலோச்சும் பல நாடுகள் மண்ணை கவ்வும். அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.
9. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மாறும். சில நாடுகளில் அரசுகள் மாறும் அபாயமும் உள்ளன.
10. சில நாடுகளில் புதிய எல்லை பிரச்சனைகள் உருவாக்கலாம், அதிபர்கள், பிரதமர்கள் பதவிகளை இழக்கலாம். இப்படி உலகப்போர் வரும் பட்சத்தில் பல அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications