3 சவாலை சமாளித்து.. உதயநிதி செய்த மூவ்! யு.எஸ்ஸில் இருந்து பேசிய ஸ்டாலின்.. சல்லி சல்லியாகிடுச்சே!
சென்னை: ஃபார்முலா 4 கார் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார். எந்த விதமான பெரிய அசம்பாவிதமும் இல்லாமல்.. முறையான திட்டமிடலுடன், எப்.ஐ.ஏ. சான்று பெற்று.. தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தி காட்டி உள்ளது.
இரண்டு நாள் போட்டிகள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் இந்த நிகழ்வு பெரிய ஹிட் அடித்துள்ளது. வடமாநிலங்களில் சாதாரண வாகனங்கள் செல்லவே சாலை சரியில்லை.. ஆனால தமிழ்நாட்டில் ஸ்ட்ரீட் ரெஸ் எல்லாம் வைக்கிறாங்க பாருங்க என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி போஸ்ட்டுகளை செய்து வருகின்றனர்

வடஇந்தியர்கள் பலர் இதை பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் என்று நெட்டிசன்கள் பலர் போஸ்ட் செய்துள்ளனர். தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது.. இதனால் முதலீடுகள் வரும் என்று போஸ்ட் செய்துள்ளனர். இன்னும் பலர்.. தமிழ்நாட்டில் நடப்பது போல பெங்களூர் போன்ற இடங்களில் செய்ய முடியாது. அதெல்லாம் கடைசி வரை கனவாகவே இருக்கும் என்று நெட்டிசன்கள் பலர் தமிழ்நாட்டை பாராட்டி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 3 பெரிய சவால்களை சமாளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வை மேற்கொண்டு உள்ளார்.
கார் பந்தயம் சவால் 1: ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக கடுமையான சட்ட வழக்குகள் நடந்தன. அரசியல் ரீதியாக, சட்ட ரீதியாக கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இதை எல்லாம் சமாளித்தே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டி உள்ளார். சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
சவால் 2: இரண்டாவது சவால் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி செய்யப்பட்ட நெகட்டிவ் கமெண்ட். சென்னையில் ஒரு பெரிய போட்டி நடக்கிறது. இதனால் முதலீடுகள் வரும், உலக அளவில் சென்னை கவனிக்கப்படும் என்பதை பற்றி பேசாமல்.. சிலர் சென்னையில் நடக்கும் இந்த போட்டிகளை கிண்டல் செய்தனர்.

சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்பது தொடங்கி.. இதை கடுமையாக கிண்டல் செய்தனர்.
சவால் 3: இது போக எதிர்க்கட்சிகள் இந்த போட்டிக்கு எதிராக கடுமையாக காய்களை நகர்த்தி வந்தன. அதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை முன்னின்று நடத்துவதால்..இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கின. இதற்கு இடையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி காட்டி உள்ளார்.
ஸ்டாலின் வெளிநாடு: ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும் போது.. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளித்து.. வழக்குகளை எதிர்கொண்டு உதயநிதி இதை சாத்தியமாக்கி உள்ளார். முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற இந்த ரேஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடைசி நொடி வரை ரேஸ் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது.

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன.
FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நேற்று நிலவியது. கடைசி 6 மணி வரை ரேஸ் நடப்பதில் சிக்கல் இருந்தது.. 6 மணிக்கு கூட சில போட்டியாளர்கள் அறைக்கு திரும்பும் நிலை இருந்தது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது. முக்கியமாக போட்டிக்கு முன்பாக கூட.. மீண்டும் ஒருமுறை, போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, அமைச்சர்கள் - நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers' Stand - Garage போன்ற வசதிகள், மருத்துவமனையில் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து.. அப்படி பிரச்சனை இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அதன்பின்பே போட்டி தொடங்கப்பட்டது.

போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன் அமைச்ச உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், FIA சான்றிதழ் பற்றியும், பாஜக தொடுத்த வழக்கின் நிலவரங்கள் பற்றியும் பேசி உள்ளார். அதில் வழக்கில் வந்த தீர்ப்பு என்பது பற்றியும் எப்ஐஏ சான்றிதழ் கிடைப்பதில் 19வது வளைவுதான் சிக்கலாக அமைந்து உள்ளது என்று விளக்கி உள்ளார். ஆனால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் விளக்கி உள்ளார்.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் அனுமதி வாங்குவதை உறுதி செய்து போட்டி நடப்பதை சாத்தியமாக்கினார் . தனி ஆளாக ஸ்டாலின் இல்லாத நேரத்தில் உதயநிதி இதை நடத்திக்காட்டியது திமுக பெரிய தலைகள் இடையே கவனம் பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக கட்சிக்குள் சீனியர்கள் பலர் உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலை பாராட்டி உள்ளார்களாம்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications