Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் அசத்துதே.. "சாதாரண்" வந்தே பாரத் நமக்கு வரப்போகுது..எப்போன்னு பாருங்க.. மேட்டமே அங்கதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை வரப்போகிறது.. அதுமட்டுமல்ல, சாதாரண் வந்தே பாரத் ரயில் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

What are the Benefits in Vande Bharat Sadharan Train and Sadharan Vande Bharat will be ready within 2 month

ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

குளுகுளு ரயில்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சாதாரண் ரயில்: இப்படிப்பட்ட சூழலில், படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருகின்றன. ஏசி அல்லாத வந்தே சாதாரண வகையில் ரயில்கள் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக, ஏசி சேர் கார் மற்றும் எகானமி சேர் கார் என்ற 2 வகையான இருக்கை வசதிகள் இருக்கின்றனவே தவிர, படுக்கை வசதி பெட்டிகள் இல்லை...

மார்ச் மாதம்: எனவே, பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படலாம் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், பொங்கலுக்குள் இதெல்லாம் இணைக்கப்படுவது சிரமம் என்றும், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு பிறகே, வந்தே பாரத் ரயிலுக்கான படுக்கை வசதி பெட்டி தயாரிப்பு ரெடியாகும் என்றும், கடந்த மாதம் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.. இன்னும் 2 மாதங்களில், அதாவது, வருகிற அக்டோபர் மாதமே இந்த சாதாரண் வந்தே பாரத் ரயில் வரப்போகுதாம்..

8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உட்பட, 22 பெட்டிகளுடன், சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ஆலையில் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு ரயில்களை மட்டும் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What are the Benefits in Vande Bharat Sadharan Train and Sadharan Vande Bharat will be ready within 2 month

ஐசிஎப் ஆலைகள்: சாதாரண் வந்தே பாரத் அல்லது "அந்த்யோதயா வந்தே பாரத்" என்ற பெயரில் இந்த ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பெட்டி தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ஆலையில், கடந்த வாரம் துவங்கியது..

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "வந்தே பாரத்" ரயிலில், சில மாற்றங்களை செய்து, சாதாரண் வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் ஆலையில், இதற்கான இன்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளன...

சரக்கு பெட்டி: இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு, AC பிரிவில், 12 பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, சரக்கு பெட்டி உட்பட மொத்தம், 22 பெட்டிகள் இருக்கும்.. அக்டோபர் மாதத்திற்குள் 2 ரயில்கள் தயாரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரஉள்ளோம்.. அத்துடன், இந்த ரயிலை அடையாளம் காணும் வகையில், பிரத்யேக வண்ணம் பூச திட்டமிட்டுள்ளோம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+