அள்ள அள்ள 2 சிக்ஸர்.. மலைக்க வைத்த வந்தே பாரத்.. படுக்கை வசதியுடன் ரெடியாகுதாமே.. ஹைலைட்டே அங்கதான்
சென்னை: தமிழகத்துக்கு அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை வரப்போகிறது.. அதுமட்டுமல்ல, இனி வரும் ரயில் சேவையில் கூடுதல் வசதிகளும் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..
அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
குளுகுளு ரயில்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்
வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
3வது ரயில்: தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - மைசூரு இடையே ஜோலார்பேட்டை பெங்களூரு வழியாக செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்பட உள்ளது.
நாளைய தினம் அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி இந்த ரயிலை பிரதமர் துவக்கி வைப்பார் என்றார்கள். ஆனால், இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.. எப்படி பார்த்தாலும், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நெல்லைக்கு வந்தே பாரத் சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன், சென்னை டூ விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகினற்ன.
ரயில் சேவைகள்: இதைத்தவிர, வந்தே மெட்ரோ என்ற பெயரில் சென்னை டூ திருப்பதி வரை குறுகிய தூர ரயில் சேவையை கொண்டு வர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாம்.. இப்படிப்பட்ட சூழலில், படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருகின்றன.
ஏசி அல்லாத வந்தே சாதரன் வகையில் ரயில்கள் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, ஏசி சேர் கார் மற்றும் எகானமி சேர் கார் என்ற 2 வகையைன இருக்கை வசதிகள் இருக்கின்றனவே தவிர, படுக்கை வசதி பெட்டிகள் இல்லை...
எனவே, பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படலாம் என்று பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், படுக்கை வசதிகளுடன் கூடிய பெட்டிகள், பொங்கலுக்குள் இணைக்கப்படுவது சிரமம் என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை: அதனால், பொங்கல் பண்டிகைக்குள் இந்த இணைப்பு பணிகள் முடியாது என்பதால், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு பிறகே, வந்தே பாரத் ரயிலுக்கான படுக்கை வசதி பெட்டி தயாரிப்பு பணிகள் ரெடியாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
அதுமட்டுமல்ல, பாரத் ரயிலில் ரிசர்வேஷன் என்பது எப்போதுமே 100 சதவீதத்தை தாண்டியே இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும், அத்துடன் படுக்கை வசதிகளுடன்கூடிய பெட்டிகளும் வந்துவிட்டால், வரவேற்பு டபுள் மடங்காகிவிடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
டபுள் மகிழ்ச்சி: வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகமாக உள்ளதால்தான், "சாதாரண்" வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பயன்பாடுக்கு வரப்போவதாக தெரிகிறது. அத்துடன் நெல்லை டூ சென்னை ரயிலில் சாப்பாடு தரப்போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் ரெடியாகி கொண்டிருப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications