சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. நீடிக்கும் ஆலோசனை.. இந்த "நான்கில்" ஒன்றுக்கு வாய்ப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் சில மணி நேரமாக நடந்து வரும் நிலையில் சுமூக உடன்பாடு எட்டப்படாவிட்டால் என்ன நடக்கும்?
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றஉ ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை தலைமை உள்ளதால் கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த சில மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனினும் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.

முதல் வாய்ப்பு
இந்த பிரச்சினையில் என்னென்ன நடக்க வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். அதாவது 4 வாய்ப்புகள்தான் உள்ளன. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் இந்த பிரச்சினையில் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பிருப்பிருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பு
இரண்டாவது ஒரு வேளை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு எம்எல்ஏக்களின் மெஜாரிட்டி இருந்து அவர் தேர்வானால் ஓபிஎஸ் கோபித்து கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறி, பின்னர் சசிகலாவுடன் இணைந்து அதிமுக தலைமையை கைப்பற்ற முனைப்பு காட்ட வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது வாய்ப்பு
மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் போட்டியிடலாம். வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யட்டும் என்ற ஒரு வாக்கெடுப்பை நடத்தியும் முடிவுக்கு வரலாம். இது பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.

நான்காவது வாய்ப்பு
கடைசியாக 4 ஆவதாக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமானால் கட்சிக்கு ஒற்றை தலைமை என்ற ரீதியில் ஓ பன்னீர் செல்வத்தை தலைவராக்குவது, இதையேற்று ஓபிஎஸ்ஸும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பது- இந்த நான்கில் ஏதேனும் ஒன்று நடக்கவே வாய்ப்புள்ளது. இந்த பாயிண்ட் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!











Click it and Unblock the Notifications