கலக்குறாங்களே! அடுத்தடுத்து அடித்து தூக்கும் தங்கம் + முத்துசாமி.. 6 குட் நியூஸ்கள்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் துறை அமைச்சராக முத்துசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இலாக்கா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அவரிடம் இருந்த மின்சாரத்துறை, மது விலக்கு துறை இரண்டும் மூத்த அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

What are the essential announcements from EB Minister Thangam Thennarasu and Tasmac Minister Muthusamy?

தமிழ்நாட்டில் டாஸ்மாக் துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்று உள்ளார். டாஸ்மாக் துறை அமைச்சராக முத்துசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 500 மூடப்பட்டன. இது முழுக்க முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (டாஸ்மாக்) அதன் செயல்பாடுகளை எண்டு டூ எண்டு வரை கணினிமயமாக்க உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்கள் விரைவில் கணினி பில் பெறலாம். டாஸ்மாக்கை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுத்துறையான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ஆர்டரை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஸ்டாக் இருக்கிறது, இல்லை, ஸ்டாக் வேண்டும் என்ற தகவல் தொடங்கி, டிஸ்டில்லரிகளில் இருந்து கடைகளுக்கு ஸ்டாக்கை கொண்டு செல்வது, விற்பனை பில் வரை அனைத்து பகுதிகளும் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் டாஸ்மாக்கில் இனி தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை எவ்வளவு வருமானம் வந்தது என்று ரிப்போர்ட் அனுப்பவேண்டும். இதற்காக தாலுகா அளவில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வருமானத்தை வைத்து கூடுதல் டாஸ்மாக் கடைகளை மூட இந்த முடிவை எடுத்துள்ளனர். அமைச்சர் முத்துசாமி இந்த அறிவிப்புகள் மூலம் கலக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அமைச்சர் தங்கம் தென்னரசும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தங்கம் தென்னரசு: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து முக்கியமான 3 நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறார். அதன்படி ஸ்மார்ட் மீட்டர் தொடர்பாகவும் அவர் முக்கிய செய்தி ஒன்றை சொல்லி உள்ளார். ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொருத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அவர் இப்படி வெளியிட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+