Exclusive: 1947 ஆகஸ்ட் 15 அந்நிய ஆதிக்கத்திற்கு கணக்குத் தீர்த்த நாள்.. நினைவுத் தூணில் பொறிப்பு!
சென்னை: சென்னை மாநகரின் புதிய அடையாளமாக காட்சி அளிக்கிறது கோட்டை எதிரே கம்பீரமாக உள்ள நினைவுத் தூண்.
Recommended Video
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திரதின வைர விழா கொண்டாட்டங்கள் கடந்த 15-ம் தேதி இனிதே நடைபெற்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனை தொடர்ந்து, நேப்பியர் பாலம் அருகே, காமராஜர் சாலை சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தின நினைவு தூணை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நினைவுத் தூண்
59 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் நினைவு தூண் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துருபிடிக்காத உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. வைரவிழா தூணின் மணிமகுடமாக அதன் உச்சியில் மலர்ந்த தாமரை வடிவ பீடத்தில் நான்கு முக சிங்கமும், அதன் மீது அசோக சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் ராணுவ வீரர்கள்
எல்லையில் நாட்டை காக்கும் இராணுவ வீரர்களை சிறப்பிக்கும் விதமாக, நினைவு தூணின் கீழே நான்குபுறமும் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் சிலைகள் மிடுக்குடன் காட்சி தருகின்றன. மாமல்லபுரத்தை சேர்ந்த உலோக சிற்பக் கலை ஸ்தபதி ரவீந்திரன் என்பவர்தான் சுதந்திர நாள் வைர விழா நினைவு தூணை வடிவமைத்து உள்ளார்.

அசோக சக்கரம்
தாமரை பீடம், சிங்க முகம், அசோக சக்கரம் ஆகியவை மொத்தம் 13 அடி உயரத்தில், வெண்கலத்தால் செய்யப்பட்டு உள்ளன. இதன் மொத்த எடை 3,500 கிலோ வரை இருக்கும். உப்பு காற்றால் தூண் பாதிக்கப்படாத வகையில் அதற்கு வண்ணம் பூசப்பட்டு உள்ளது.

நினைவுத் தூண்
பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள நினைவு தூண் 10 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், நினைவு தூண், விடுதலை போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளின் ரத்தம், சதை, எலும்புகளால் உருவானது என்று குறிப்பிட்டார்.

அண்ணா, கருணாநிதி
நினைவு தூணின் கீழே பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சுதந்திர தினம் குறித்து கூறிய கருத்துகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. அதில் "1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் அந்நிய ஆதிக்கத்திற்குக் கணக்குத் தீர்த்த நாள்! ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிற ஆகஸ்ட் 15 சுதந்திரத்தின் பயன்களைக் கணக்குப் பார்க்கிற நாள்!" சுதந்திர தின நினைவு தூணை ஏராளமானோர் கண்டு, இதன்கீழ் நின்று செல்ஃபி எடுத்து கொண்டு
ரசித்து செல்கின்றனர்.

10 நாட்கள்
அவர்களில் ஒருவர் இதுபற்றி சொல்லும் போது, இது என்ன தூணுன்னு தெரியாம தான் பார்க்க வந்தேன். இங்க வந்த பிறகுதான் 75-வது சுதந்திர நாள் நினைவு தூண் அப்படினு தெரிஞ்சிக்கிட்டேன். சொன்ன மாதிரி, 10 நாள்லயே இந்த தூணை கட்டி முடிச்சிருக்காரு நம்ம முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்
இதை பார்க்கும் போது, தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா நல்லதையும் முதல்வர் ஸ்டாலின் நிச்சயமா செய்து தருவாருனு நம்பிக்கை வந்திருக்கு. முதல்வர் ஸ்டாலின் சாருக்கு ஒரு சல்யூட் என அவர் தெரிவித்தார். மற்றொருவர், இந்த தூணை பார்க்கறப்ப தமிழ்நாட்டுல சொல்றத செய்யுற நல்ல ஆட்சி நடக்குதுன்னு புரியுது.
திமுக ஆட்சி
ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாள்லேயே சொன்ன வாக்குறுதிய எல்லாம் நிறைவேற்றிகிட்டு வர்றாங்க. சென்னையை பார்க்கும்போது முன்பை விட இன்னும் அழகா இருக்கு. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடர்ந்தா.. தமிழ்நாடு சீக்கிரம் அமெரிக்கா மாதிரி நிச்சயம் மாறிடும். அதுல சந்தேகமே இல்ல என்று கூறினார். நமக்கும் அப்படி தான் தோன்றுகிறது. தொடரட்டும் நல்லாட்சி.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications