"சுப்ரீமோ".. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு கிடைத்த 10 சூப்பர் பவர்கள்.. இதுதான் முக்கியம்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவிற்கு பின் பொதுச்செயலாளர் ஆகும் இவருக்கு பல சுப்ரீம் பவர்கள் உள்ளன. ஜெயலலிதா இருந்த போது அவரை முதல்வர் என்பதை தாண்டி சுப்ரீமோ என்று கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர் இனி எடப்பாடியும் இதையே பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

எடப்பாடி பவர்
எடப்பாடிக்கு கிடைத்து இருக்கும் 10 சுப்ரீம் பவர்கள் பின்வருமாறு,
1. நீக்கம் - கட்சியில் இருந்து எடப்பாடி யாரை வேண்டுமானாலும் நீக்க முடியும். யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். இதற்கான முழு உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது.
2. கூட்டணி முடிவு - எடப்பாடி அதிமுகவின் கூட்டணி முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியும். அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் கூட்டணி வைக்காது என்று எடப்பாடி முடிவுகளை எடுக்க முடியும்.

சின்னம்
3. இரட்டை இலை - அதிமுகவின் இரட்டை இலைக்கு எடப்பாடி உரிமை கோர முடியும். இரட்டை இலையை கேட்டு எடப்பாடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். அவர் விரைவில் இந்த கடிதத்தை எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஏற்கும் பட்சத்தில் எடப்பாடிக்கு இருக்கும் சிறிய இடைஞ்சல்கள் கூட சரியாகிவிடும்..

வேட்பாளர்
4. வேட்பாளர் தேர்வு - எடப்பாடி அதிமுகவின் வேட்பாளர்களை தனியாக தேர்வு செய்ய முடியும். தேர்தலில் எந்த வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதை ஜெயலலிதா போல தனியாளாக முடிவு எடுக்க முடியும்.
5. ஒழுங்கு நடவடிக்கை - கட்சியில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இனி எடப்படியால் முடியும். கட்சியில் மாவட்ட செயலாளர்கள் தொடங்கி எல்லோரையும் எடப்பாடி நியமிக்க முடியும்.
6. சட்டசபையில் அதிமுகவின் நிலைப்பாடு, சட்டசபையில் யாருக்கு என்ன பதவி என்பது போன்ற முடிவுகளை எடுக்க கொறடாவிற்கு எடப்பாடி உத்தரவிட முடியும்.

பொருளாதாரம்
7 . நிதி நிர்வாகம் - கட்சியின் பொருளாளருடன் சேர்ந்து நிதி நிர்வாகத்தை எடப்பாடி கவனிக்க முடியும்.
8. பொதுக்குழு விதிகளை மாற்ற முடியும் - எடப்பாடி நினைத்தால் பொதுக்குழு விதிகளை மாற்ற முடியும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் நீக்க முடியும்.
9. எடப்பாடி நினைத்தால் இனி எளிதாக பொதுக்குழுவை கூட்ட முடியும்.
10. தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி கடிதங்களை அனுப்ப முடியும்.












Click it and Unblock the Notifications