சொந்தமா வீடு வாங்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா.. அலர்ட் தரும் ஆனந்த் சீனிவாசன்! "லிஸ்ட் பெருசு"
சென்னை: சொந்தமாக வீடு வாங்குவது தான் பெஸ்ட் முதலீடு என நம்மில் பலரும் நினைத்து வரும் நிலையில், அதில் இருக்கும் பிரச்சினைகளைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்
நமது நாட்டில் சேமிப்பு என்றால் பலரும் சொல்லும் அட்வைஸ் முதலில் வீட்டை வாங்கு என்பது தான். சொந்தமாக ஒரு வீடு என்பதை மக்கள் முதலீட்டையும் தாண்டி எமோஷ்னலாக பார்ப்பதே அதற்குக் காரணம்.

ஆனால், நிலத்திலும் சரி வீட்டிலும் சரி முதலீடு செய்வதில் பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் சேனலில், "இங்கே பலரும் வீடு வாங்குவது நல்ல முதலீடு என நினைக்கிறார்கள். வீடு வாங்கினால் அதன் பிறகு நிம்மதியாக இருக்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது நகரம் மிகவும் நெருக்கடியான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகே வீடு இருக்க வேண்டும். செங்கல்பட்டில் வீடு வாங்கிவிட்டு சென்னைக்குத் தினசரி வந்து செல்வது எல்லாம் ரொம்பவே கஷ்டம்.
நீங்கள் மாதாமாதம் வீட்டு வாடகைக்குச் செலுத்தும் தொகைக்குச் சமமாக உங்கள் இஎம்ஐ இருக்கும்பட்சத்தில் ஊருக்கு வெளியே 70 கிமீ தொலைவில் கூட வீடு வாங்கிக்கொள்ளுங்கள். பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி நீங்கள் ஆபீசுக்கு வந்து செல்ல வேண்டும். அடுத்த 20 ஆண்டுகள் லோன் அடைக்கும் வரை இப்படி உங்களால் இருக்க முடிந்தால் ஓகே.. இப்போது வீடு வாங்க வேண்டும் என்பதற்காக ஓகே சொன்னாலும் 4, 5 ஆண்டுகளில் குடும்பத்திற்குத் தேவை என மீண்டும் சென்னைக்குள் வாடகை வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.
அது அமெரிக்கா இது இந்தியா: அமெரிக்காவில் இருப்பது போல எல்லாம் இந்தியாவில் 100 கிமீ பயணித்து வேலைக்கு செல்ல முடியாது. அங்கே கார் விலை குறைவு, எரிபொருள் விலையும் குறைவு, சாலைகளும் பெரிதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் அப்படி எல்லாம் இல்லை. தினசரி வண்டலூரில் இருந்து வந்து உங்களால் வேலை செய்ய முடிந்தால் ஓகே..
இதில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நீங்கள் வாங்கும் இடத்தில் எதாவது பிரச்சினை இருக்கிறதா.. இல்லையா என்பதைக் கண்டறிவதும் சிரமம். வக்கீல் பார்த்து ஓகே சொல்லிவிட்டார்.. பதிவாளர் பதிவு செய்து கொடுத்துவிட்டார் என்றாலும் இது முடிவுக்கு வராது. நீங்கள் நிலத்தை வாங்கி 15 ஆண்டுகள் கழித்தும் கூட யாராவது வந்து அது செல்லாது என கேஸ் போடுவார்கள். நான் ஏதோ கற்பனைக்காக எல்லாம் சொல்லவில்லை.
பல பிரச்சினைகள்: சென்னையில் கூட இதுபோல நடந்துள்ளது. இப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கும். கட்டுமான நிறுவனங்களுக்கே கூட தெரியாமல் கூட பல பிரச்சினைகள் இருக்கலாம்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நிலத்தை வாங்கினால் செட்டில் ஆகவிட்டோம் என்று அர்த்தமில்லை. நிலத்தில் பல பிரச்சினைகள் வரும் ஊருக்கு வெளியே ஒரு இடத்தை வாங்கிவிட்டு நீங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கே போனீர்கள் என்றால் அங்கே யார் வேண்டுமானாலும் ஆக்கிரமித்து இருக்கலாம். பல பிரச்சினை இருக்கும். அனைத்தையும் தாண்டி விற்பதில் கூட பிரச்சினை வரும். சீக்கிரம் நிலத்தை விற்க முடியாது. வங்கியில் வைப்பதும் சிரமம்.
சேமிப்பு வேறு: சேமிப்பு என்பதே அவசரத்திற்குப் பணம் தேவை என்றால் அந்த சேமிப்பைப் பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதாவது மிடில் கிளாஸ் மக்களுக்கு அவசரத்திற்குப் பணம் தேவை என்றால் நிலத்தில் இருந்து உடனடியாக எடுக்க முடியாது என்பதே உண்மை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications