"தேன்மொழி.. பேசமாட்டியா" .. அத்தனை காதலித்தும் என்ன பயன்.. இப்படி பண்ணிட்டீங்களே சுரேந்தர்!
காதலர்கள் இடையே வாக்குவாதம் ஏன் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது
சென்னை: தேன்மொழிக்கு பேச விருப்பம் இல்லை என்று தெரிந்தும், பின்னாடியே வந்து தொந்தரவு தந்தாராம் அந்த இளைஞர்.. இதை ரயில்வே ஸ்டேஷனில் நிறைய பயணிகள் பார்த்துள்ளனர்!
எழும்பூர் வீராசாமி தெருவில் ஒரு ஃபேமஸ் ஆன ஹாஸ்டலில்தான் தேன்மொழி தங்கி உள்ளார். தேன்மொழிக்கு வயது 26 ஆகிறது. கூட்டுறவு துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
வழக்கம்போல வேலைக்கு செல்ல சேத்துப்பட்டு ரயில்நிலையம் வந்துதான் ரயில் ஏறி செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. பூர்வீகம் ஈரோடு என்பதால், தன் ஊரை சேர்ந்த சுரேந்தரை காதலித்துள்ளார். வீட்டில் கல்யாணத்துக்கு எதிர்ப்பு என்பதால், சுரேந்தரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

பேசவில்லை
நிறைய முறை சுரேந்தர் தேன்மொழிக்கு போன் செய்தாராம். ஒருமுறைகூட இவர் அந்த போனை எடுக்கவில்லை. இதனால்தான் சுரேந்தருக்கு ஆத்திரம் அதிகமாகி உள்ளது. இந்த கடுப்பில் இருந்த சுரேந்தர், தேன்மொழியை சந்தித்து பேசியுள்ளார்.

ஆத்திரம்
"ஏன் தேன்மொழி.. என்கிட்ட பேச மாட்டேங்குறே.. என் போனை எடுக்க மாட்டேங்குறே"என்று சுரேந்தர் கேட்டுள்ளார். அதற்கு தேன்மொழியோ, "உனக்கும் எனக்கும் ஒத்துவராது, வீட்டிலயும் ஒத்துக்கல.-.. என்னை கட்டாயப்படுத்தாதே" என்று சொல்லி உள்ளார். அந்த தருணத்தில்தான் கொலை செய்யவே சுரேந்தர் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வழிமறித்தார்
நேற்றுகூட இதே பஞ்சாயத்துதான் ரயில்வே ஸ்டேஷனில் நடந்துள்ளது. வழக்கம்போல பதிலை சொல்லிவிட்டு, தேன்மொழி வேகமாக ரயில் ஏற சென்றிருக்கிறார். சுரேந்தர் அப்போது வழிமறித்ததாகவும், தேன்மொழி, அவரை திட்டியபடியே வந்ததாகவும் சொல்கிறார்கள். விடாமல் துரத்திய சுரேந்தர், தேன்மொழியின் கையை பிடித்து நிற்கும்படி செய்து தகராறும் செய்திருக்கிறார்.

கத்திக்கு சாணம்
அப்போதுதான் தயாராக வைத்திருந்த அரிவாளில் தேன்மொழியை வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யும் நோக்கில் அந்த அரிவாளுக்கு சாணம் பிடித்து வந்திருக்கிறார் சுரேந்தர். முதலில், இடது பக்க தாடை, பிறகு இடது பக்க கையில் ஓங்கி வெட்டியுள்ளார். அப்போதே தேன்மொழி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். விழுந்த பின்னாடியும், ஆத்திரம் தீராமல் மறுபடியும் முகத்தில் ஓங்கி வெட்டியுள்ளார். இதைஎல்லாம் கண் முன்னாடியே பார்த்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

தற்கொலை முயற்சி
பயணிகள் ஓடுவதை பார்த்ததும்தான் சுரேந்தருக்கு பயம் அதிகமாகிவிட்டது. அதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்யலாம் என்று அடுத்த செகண்டே முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் குதிப்பதற்கு முன்பே ரயில் சென்றுவிட்டது. அதனால் தலையில் மட்டும் காயங்கள் ஏற்பட்டு பிளாட்பாரத்திலேயே விழுந்துள்ளார். பிறகுதான் அரசு ஆஸ்பத்திரிக்கு சுரேந்தரை சிகிச்சைக்காக கொண்டு சென்று இருக்கிறார்கள்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications