நாளை மறுநாள் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி.. நிபந்தனைகள் என்னென்ன? டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி சில இடங்களில் அனுமதி மறுத்தது. சில இடங்களில் சுற்றுசுவருக்குள் ஊர்வலம் நடத்த தனி நீதிபதி அமர்வு அனுமதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரித்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 27ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஏப்ரல் 16ம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாடு காவல் துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக சில முக்கிய நிபந்தனைகளை அறிவுரைகளாக வழங்கி உள்ளார்.
அதன்படி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூறிய வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது. ஆர்எஸ்ஆர் ஊர்வலத்தில் கம்பு உள்பட எந்த ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றியும், மாற்று மதங்களை பற்றியும் பேச கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்ல வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பாதையில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாருக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும்.
ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அதோடு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு ஊர்வலத்தை தலைமையேற்று நடத்துபவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களை தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications