Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" வீடியோவை பார்த்ததுமே.. குப்பென்று வியர்த்து கொட்டி.. வெலவெலத்த தினகரன்.. காய் நகர்த்திய சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகரன் சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் நிறைய தகவல்களை தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணையில் தினகரன் ஆஜராகியிருந்தார்.. அந்த விசாரணையின்போது என்ன நடந்தது என்பது குறித்த சில தகவல்கள் அதிமுக, அமமுக களத்தை அசைத்து பார்த்து வருகின்றன.

இரட்டை இலை சின்னத்தை பெற 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணையில் ஆஜரானார் தினகரன்.

டெல்லியில் நடந்த இந்த விசாரணை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்தது. விசாரணையில் பல கேள்விகளுக்கு தெரியவில்லை என தினகரன் பதிலளித்திருந்தாலும், அவர் சொல்வது பொய் என நிரூபித்திருக்கிறது அமலாக்கத்துறை. அப்போது ஏகத்துக்கும் மிரண்டு போனாராம் தினகரன் என்கிறது டெல்லி தகவல்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதாவது, விசாரணையின் துவக்கத்தில் தினகரனின் உடல் நலம் குறித்து அக்கறையாக விசாரித்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதன்பிறகு ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவரது அரசியல், ஜெ.மறைவுக்கு பிறகு அவரது அரசியல், சசிகலாவுக்கும் தினகரனுக்குமான கொடுக்கல் வாங்கல் விவகாரம், கே.கே.நகர் இடைத்தேர்தலில் அவரது வெற்றி என சாதாரணமாகத்தான் விசாரணை துவங்கியிருக்கிறது.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அதன்பிறகு, புரோக்கர் சுகேஷின் தொடர்பு குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, அவர் யாரென்றே தெரியாது என சொல்லியிருக்கிறார் தினகரன். அப்போது, "நல்லா நினைவுபடுத்திச் சொல்லுங்கள் மிஸ்டர் தினகரன். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிலும் உங்களுக்கு எதிராகவும் போகலாம். எச்சரிக்கையாக இருங்கள். உண்மையை மட்டும் பேசுவது உங்களுக்கு நல்லது" என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனாலும் சுகேஷை தெரியவே தெரியாது என மறுத்துள்ளார் தினகரன்.

வீடியோ சீன்

வீடியோ சீன்

அப்போது, சில போட்டோக்கள், சி.சி.டி.வி.காட்சிகளின் பிரிண்ட் அவுட்டுகளை அவருக்கு முன்னால் தூக்கி போட்டுள்ளனர். பிரபல ஹோட்டல் ஒன்றில் தினகரனும் சுகேஷும் சந்திப்பது, ஒரு டேபிளில் இருவரும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன. அதை பார்த்தது மிரண்டு போய்விட்டார். அந்த ஏ.சி.ஹாலிலும் அவருக்கு வியர்த்திருக்கிறது. இதனையடுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தினகரன் பிறகு மெல்ல பேச ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

"இந்த ஹோட்டலில் நான் தங்கியிருப்பதை அறிந்து அவர்தான் என்னை வந்து சந்தித்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், அங்குள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தன்னால் சாதகமாக சாதிக்க முடியும் என்றார்.. இப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையத்தில் இருப்பதையும், மத்திய அரசின் பார்வை தமிழக அரசுக்கு (அதிமுக அரசு) சாதகமாக இருப்பதால் இந்த வழக்கில் உங்களுக்கு பாதகமான தீர்ப்புதான் வரும் எனவும் சொல்லி, நீங்கள் ஓகே சொன்னால் உங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருகிறேன் என்றும் சொன்னார்.

பேரம் பேசினார்

பேரம் பேசினார்

அந்த சந்திப்புதான் இது. இரட்டை இலை உங்களுக்கு சாதகமானால்... 50 கோடி தர வேண்டும் என பேரம் பேசினார். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் மறுத்து விட்டேன். லஞ்சம் கொடுத்து சின்னத்தை பெற்றால் எப்படியிருந்தாலும் அந்த விவகாரம் வெளியே வரும் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கையாக இருந்தேன். லஞ்சம் கொடுத்து சின்னத்தை பெற வேண்டிய தேவையும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஏன்னா, ஆட்சி இருப்பதாலும் சின்னம்மா சிரையில் இருப்பதாலும் தான் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இப்படி ஆடுகிறார்கள். சின்னம்மா வெளியே வந்து விட்டால் எல்லாம் சரியாகும் என நினைத்தே லஞ்சம் கொடுக்க மறுத்தேன். உண்மை இப்படி இருக்கும்போது, அந்த நபர் (சுகேஷ்) ஏன் என்னை மாட்டிவிடுகிறார்னு தெரியவில்லை. பேரத்துக்கு படியாததால் இப்படி செய்கிறாரோ எனக்கு சந்தேகம். மேலும் இதில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கிறது" என்று படபடவென பொரிந்து தள்ளியிருக்கிறார் தினகரன் என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

நான் நிரபராதி

நான் நிரபராதி

அமலாக்கத்துறையினரின் 10 மணி நேர விசாரணையை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசினார்.. அப்போது, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி.. இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது.. ஆனால், அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார் என்று விளக்கம் தந்துள்ளார்.

சுகேஷ்

சுகேஷ்

இதனிடையே, இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திர சேகரை அமலாக்க துறை மீண்டும் கைது செய்துள்ள நிலையில், டிடிவி தினகரனிடம் அமலாக்க துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் டிடிவி மீண்டும் கைது செய்யப்படலாம் என்று அமலாக்க துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+