சீறி பாய்ந்த நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்! பிரேக் ரிப்பேரானா ரயிலை நிறுத்த தேவையில்லையாமே!
சென்னை: சென்னை- நெல்லை இடையே தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன தெரியுமா?
நவீன வசதிகளை கொண்ட அதிவிரைவு ராஜதானி, தேஜஸ், வந்தே பாரத் என ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 25 வந்தே பாரத் ரயில் சேவை இருந்து வரும் நிலையில் இன்றைய தினம் புதிதாக மேலும் 9 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அந்த வகையில் இன்று தொடங்கப்பட்ட 9 வந்தே பாரத் ரயில்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான முன்பதிவுகள் நேற்று தொடங்கியது. இது சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது.
இந்த நிலையில் இந்த ரயிலின் சிறப்புகள் குறித்து பார்ப்போம். இந்த ரயில் 8 பெட்டியை கொண்டுள்ளது. 7 சேர்கார் பெட்டியும் ஒரே ஒரு எக்ஸிகூட்டிவ் பெட்டியும் உள்ளது. இந்த பெட்டிகள் ஒவ்வொன்றும் தலா ரூ 65 கோடியில் தயாரானது. அனைத்து கதவுகளும் தானியங்கி. ஒரு கதவு திறந்திருந்தாலும் ரயிலை இயக்கவே முடியாது.
இந்த ரயிலில் என்ஜின் மட்டுமின்றி ரயில் பெட்டிகளிலும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அதிவேகமாக செல்கிறது. ஒரு சக்கரம் அல்லது பிரேக் பழுதானாலும் ரயிலை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ரெயிலின் வேகம் குறைந்து விடும். என்ஜின் பழுதாகும் என்ற பேச்சே இல்லை. சேர் காரில் ஒரு பெட்டிக்கு 78 இருக்கைகள் என மொத்தம் 508 இருக்கைகள் உள்ளன.
இதில் தண்ணீர் பாட்டில் வைக்க ஹோல்டர், செல்போன் சார்ஜர், உணவு அருந்த ஸ்டான்ட், லக்கேஜ் வைக்க போதிய இடம், அடுத்த ரயில் நிலையம் குறித்த டிஜிட்டல் அறிவிப்பு, ஒலிபெருக்கி வசதி, ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அலாரம் அனைத்து பெட்டிகளிலும் ஒலிக்கும். மருத்துவ உதவி அல்லது அவசர காலத்திற்காக ஓட்டுநருடன் அல்லது guard வுடன் பேசும் வசதி உள்ளது.
கழிப்பறை வசதிகளை பொருத்தமட்டில் indian toilet, western toilet உள்ளன. அது போல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் கழிப்பறைகள் உள்ளன. கைக்குழந்தையுடன் கழிப்பறைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைகளை பாதுகாப்பாக உட்கார வைக்கவும் இருக்கை வசதி உள்ளது. பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இருக்கைகளில் கூட பிரெய்லி இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications