உங்களுக்கும் காய்ச்சலா? திடீரென அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் கேஸ்கள்.. இந்த அறிகுறிகள் இருக்கா?
திடீரென இந்த கேஸ்கள் இந்தியா முழுக்க அதிகரிக்க தொடங்கி உள்ளன.
சென்னை: இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதன் அறிகுறிகள் என்னென்று இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது.
சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.

காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 2 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 4 வாரங்கள் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் கூட்டம் கூட்டமாக செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை. பலரும் இது கொரோனாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் இது கொரோனா இல்லை, இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. அதோடு இதற்கான அறிகுறிகளையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

மோசம்
பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் மோசமானதாக உள்ளது. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,
சளி,
இருமல்,
அதிக காய்ச்சல்,
உடல்வலி,
தலைவலி,
தும்மல்,
மூக்கு அடைப்பு ,
தொண்டை புண்,
கண்களில் நீர் வடிதல்,
மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

மீண்டும் வரும்
இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிக பலம் கொண்டது. இதனால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் பரவலாக இந்த வைரஸ் பரவி உள்ளது. அதனால்தான் தற்போது கேஸ்கள் அதிகரிப்பதாக தெரிவித்து உள்ளன, மருத்துவமனைகளுக்கு 30-40 சதவிகித கேஸ்கள் இப்படித்தான் வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடுமையான வலி
முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இருமல், சளி மற்றும் குமட்டல் வழக்குகளுக்கு மத்தியில் கண்மூடித்தனமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதாவது ஆண்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ கழகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications