Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்.. ஆதார் +செல்வமகள் சேமிப்பு திட்டம் +பான் கார்டு.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில் ஆதார் அட்டை மற்றும் பரஸ்பர நிதிகள், F&O, TDS தொடர்பான விதிகள் மற்றும் சிலிண்டர் விலைகள் உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளனர்.

சேமிப்பு கணக்குகள்: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட உள்ளன.

tangedco eb aadhaar

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் மாற்றப்படலாம்.

ஆதார் - பான் கார்டை இணைப்பதற்கான இறுதி நேரம் நெருங்கி வருகிறது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்போடு இருக்கும். இதனால் ஃபின்டெக் நிறுவனங்கள் மிக எளிதாக உங்களை தொடர்பு கொள்ள முடியாது. ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். ஆனால் உங்களின் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதை பயன்படுத்தி உங்களின் விவரங்களை பெற முடியாது. ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் இருந்து மத்திய அரசு ₹600 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது.

நாடு முழுக்க வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818,50ல் நீடிக்கிறது.

கடந்த சில மாதங்களாக LPG சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் சோதனை செய்யப்படுகிறது.

மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள்

ஆதார் கட்டாயம்: இந்த நிலையில்தான், நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான முக்கியமான சில விதிகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி கேஸ் சிலிண்டர் வாங்குவதில் குறிப்பிட்ட கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கேஸ் சிலிண்டர் வாங்க ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் கேஒய்சி கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆதார் கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது

ஆனால் சென்னையில் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+