மின் தடையா.. அப்படி என்றால்? - ஆச்சரியப்படுத்தும் எழும்பூர் தொகுதி
சென்னை: மின் தடையா.. அப்படி என்றால் என்ன என ஆச்சரியப்படுத்தும் வகையில் எழும்பூர் தொகுதியில் மின்வெட்டே இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுக் காலத்திற்குள் இத்தொகுதியை மின் சேவையில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எழும்பூரைச் சென்னை மாநகரின் இதயப் பகுதி என்று சொல்ல வேண்டும். அந்தளவுக்குப் பல முக்கியமான இடங்கள் இந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், ஐசிஎம்ஆர், ராஜீவ்காந்தி மருத்துவமனை, அரசு அருங்காட்சியகம், குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை, எழும்பூர் நீதிமன்றம், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் பில்டிங், நேரு உள்விளையாட்டு அரங்கம் என எந்தப் பக்கம் திரும்பினாலும் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது.

350 ஆண்டுகள் பழமையான தொகுதி:
இந்தப் பரபரப்பு இன்றைக்கு நேற்று அல்ல. ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பிரிட்டிஷ் கால ஆட்சியிலிருந்தே அதிகம் பரபரப்பைப் பார்த்து வரும் தொகுதி. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஐ. பரந்தாமன் பதவி வகுத்து வருகிறார். வெளி மாவட்டங்களிலிருந்து வரும் ரயில் பயணிகள் அதிகம் புழங்குவதாலும், அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்களாலும் இந்தப் பகுதி அதிக மக்கள் நடமாட்ட மிகுந்ததாக இருந்து வருகிறது. மேலும் செளகார்பேட்டைக்கு அடுத்தபடியாக வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளான வேப்பேரி, பெரிய மேடு ஆகியவை இந்த எழும்பூர் தொகுதிக்குள்தான் வருகிறது. இதைத்தவிர்த்து வெளியூர்களிலிருந்து மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களை வாங்க, அதிகப்படியான வியாபாரிகள் நாடிவரும் பகுதியான புதுப்பேட்டையும் இதன் உள்ளாகவே உள்ளது.

இத்தனை மாற்றங்களா?
மக்கள் புழக்கம் எந்தளவுக்கு அதிகம் இருக்கிறதோ அதே அளவுக்கு இந்தத் தொகுதியில் மின் தேவையும் இருந்து வருகிறது. அதை உணர்ந்தே ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுக்காலத்திற்குள் இத்தொகுதியை மின் சேவையில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்தொகுதி மின் துறையில் எந்தளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து, எழும்பூர் துணைமின் நிலைய பொறியாளர் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர், "55 பில்லர்கள் கிட்டத்தட்ட 3 அடி உயரம் அளவுக்கு உயர்த்தி அமைந்துள்ளோம். பழைய மின் உபகரணங்களை மாற்றி உள்ளோம். பாந்தியன் சாலையில் சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் 'சிங்கார சென்னை' திட்டத்தை உருவாக்கும் நோக்கில் 4 ஆர்.எம்.யூக்களை புதியதாக அமைத்துள்ளோம்.
ஸ்பர்ட்டாங்கில் துணை மின் நிலையத்தில் உள்ள உயர் அழுத்தப் பிரச்சினையைக் குறைக்க புதிய வயர்களை அமைத்து, சேத்துப்பட்டு ஃபீடர் லைன் உடன் இணைத்துள்ளோம். ஆகவே மின் பளு குறைந்துள்ளது. அதனால் ஏற்படக் கூடிய மின் தடைகள் முற்றாகச் சரி செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள அரசு கண் மருத்துவமனைக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் ஒன்றாக இதுவரை சென்றுகொண்டிருந்த கேபிள்களை தனித்தனியாகப் பிரித்துத் தந்துள்ளோம். அதனால், மின் பளு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக இப்பகுதி மின் தடையே இல்லாத அளவுக்கு மாறியுள்ளது" என்கிறார்

60 ஆண்டுகளில் பார்க்காத அதிசயம்
இதே எழும்பூர் பகுதியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் முத்தையா. அவர் இந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறை அடைந்துள்ள மாற்றம் பற்றி அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். இங்குள்ள அனைத்து மின் விநியோக பெட்டிகளையும் உயரமாக மாற்றிப் பொருத்தியதால், இந்த மழையின் போது ஒருமணிநேரம் கூட மின் தடை ஏற்படவில்லை என்கிறார். இது தனது 60 ஆண்டுக்கால வாழ்வில் பார்க்காத அதிசயம் என்கிறார். இந்தப் பகுதியில் மொத்தமாக 11 ஃபீடர்கள் உள்ளன. எந்த ஒன்று பழுதானாலும் உடனே அலாரம் அடித்துவிடும். அதனால், மின் ஊழியர்கள் அலர்ட் ஆகிவிடுகிறார்கள். அதற்காகக் கணினி வைத்துக் கண்காணித்து வருகிறார்கள். எழும்பூர் உதவி செயற்பொறியாளர் ஒருவர், "எனது கண்காணிப்பில் எழும்பூரின் பாதி பகுதி வருகிறது. மேலும் பாதி சேத்துப்பட்டும் வருகிறது. வீட்டு இணைப்பு உள்ள வாடிக்கையாளர்கள் 8 ஆயிரம் பேர் வருவார்கள். வணிகம் சார்ந்த இணைப்பைப் பெற்றவர்கள் 2 ஆயிரம் பேர் வருகிறார்கள். ஆக மொத்தமாக 10 ஆயிரம் இணைப்புகள்.

மொத்தம் 115 டிரான்ஸ்ஃபார்மர்கள்
என் பகுதியில் மொத்தம் 115 டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளன. இதில் புதியதாக அமைத்தவையும் உள்ளன. செல்வ நாதன் தெருவில் அடிக்கடி மின் தடை பிரச்சினை இருந்து வந்தது. அங்கு புதியதாக ஒரு மின்மாற்றி அமைத்து அந்தப் பிரச்சினையைச் சரி செய்துள்ளோம். அதேபோல் கிளப் ரோட்டில் அதிக மின் பளு பிரச்சினை இருந்துவந்தது. அங்கும் ஒரு மின்மாற்றியை புதியதாக அமைந்து தடையற்ற மின் சேவையை ஏற்படுத்தித் தந்துள்ளோம். முன்பு மழை வெள்ளம் அதிகமாக நிற்கும் பகுதியில் உள்ள மின் விநியோக பெட்டிகளை மட்டுமே 3 அடி உயரத்திற்கு மாற்றி அமைத்தோம். இப்போது எங்கெல்லாம் விநியோக பெட்டி உள்ளதோ அவை அனைத்தையும் உயரப்படுத்தி வருகிறோம். அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன" என்கிறார்
இந்தத் தொகுதியில் உள்ள வெங்கடாசலம் தெரு, ரிப்பன் மாளிகை, திருவேங்கட முதலி தெரு, நல்ல மணி தெரு, தாமோதரன் தெரு, சுந்தரம் பிள்ளை சந்து, மாண்டியத் கோர்ட், காவல் ஆணையர் அலுவலகம் என ஏறக்குறை 20 பகுதிகளில் புதியதாக 20 ஆர்.எம்.யூக்களை புதியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு மட்டும் ஆட்டோ ஃபீடர் இரண்டு லைன்களில் அமைத்துள்ளனர். ஒரு மின் பாதையில் வரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், உடனே தானியங்கியாக மற்றொரு மின் பாதை வழியே மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். இதனால், மருத்துவமனைக்கு வரும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புரசைவாக்கம் அடைந்த மாற்றங்கள்
"புரசைவாக்கம் பகுதியில் மட்டும் 20 மின் விநியோக பெட்டிகளை 3 அடி உயர்த்தி அமைத்துள்ளோம். ஆர்.எம்.யு ஆக இதுவரை 3 மின்மாற்றிகளை மாற்றி இருக்கிறோம். மேலும் மூன்றை மாற்றும் பணி நடைபெறுகிறது. புரசைவாக்கம் பகுதிக்கு என்றே மூன்று புதிய ஃபீட்டர்கள் அமைத்துள்ளோம். இதனால் குறைந்த மின் அழுத்த நிலவி வந்த அனைத்து பகுதிகளும் பயனடைந்துள்ளன. இதே எழும்பூர் பகுதிக்கு உயர்ந்த மின் அழுத்தப் பாதைகள் சுமார் 14.84 கி.மீட்டர் தூரம் அமைத்துள்ளோம். அதே மாதிரி தாழ்வழுத்த மின் பாதைகள் 4.255 கி.மீட்டர் தூரம் மாற்றி அமைத்துள்ளோம்"என்கிறார் கீழ்ப்பாக்கம் உபகோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியர் சரவணன். இதே மாதிரி சூளைப் பகுதியில் உள்ள அனைத்து டிரான்ஸ்ஃபார்மர்கள் ஆர்.எம்.யுக்களாக மாற்றப்பட்டுவிட்டன. அதில் மாற்றவேண்டியவை எனப் பார்த்தால், இன்னும் 6 மட்டுமே உள்ளன. பில்லர்கள் 30 உயரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு 20 பில்லர்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

சூளையில் நடந்த மாற்றங்கள்
சூளையைப் பொறுத்தளவில் 50% வீட்டு உபயோக இணைப்புகள் உள்ளன. 50% வணிக உபயோக மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகளில் குடிசைப் பகுதிகளும் அடக்கம். ஆகவே இந்தப் பகுதி நடுத்தர வர்க்கமும் ஏழை எளிய மக்களும் நிரம்பியுள்ளனர். ஆகவே, கடந்த ஆட்சியில் அதிக கவனம் பெறாமல் இருந்து வந்தது. இந்த ஆட்சியின் இத்தனை மாற்றங்களைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அடைந்துள்ளது இத்தொகுதி. அதற்கு முழுக்காரணம் முதல்வர் ஸ்டாலின். அதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்கிறார் இங்கே 40 ஆண்டுகளாக டீக்கடை நடத்திவரும் மாதவன்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications