வசமாக போடப்பட்ட பிளான்! முதல்வர் கையில் எடுத்த "பூஞ்சி" அஸ்திரம்! ஆளுநருக்கு எதிராக கேம் ஆடும் திமுக
சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் அதிகாரத்தை பறிக்கும் முக்கியமான மசோதா தமிழ்நாடு அரசின் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு பின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஞ்சியின் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் - தமிழ்நாடு அரசுக்கு இடையிலான மோதலை இந்த மசோதா மேலும் அதிகரித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
நேற்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஞ்சியின் ஆணையம் பற்றி பேசி இருந்தார். முதல்வர் தனது உரையில், தற்போது மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நியமனம் நடக்கிறது. ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை இருப்பது போல் செயல்படுகிறார். அது தவறு. 2007ல் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்க கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி பூஞ்சி
ஆளுநரிடம் இந்த அதிகாரம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழி வகுக்கும். அதிகார மோதலை ஏற்படுத்தும். இந்த அதிகாரம் மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் அந்த பரிந்துரையை அடிப்படையாக வைத்து நேற்று துணை வேந்தர் நியமன மசோதாவை ஆளும் திமுக தாக்கல் செய்தது. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டதே முக்கியமான காரணத்திற்காகத்தான்.

உறவுகள் என்ன?
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஞ்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த ஆணையம் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்ந்து. அதில், அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு, துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இல்லை என்று அந்த ஆணையம் குறிப்பிட்டது. அதோடு ஆளுநர்களுக்கு மாநில அரசுகள் இந்த அதிகாரம் கொடுத்தால் ஒழிய அரசியலமைப்பு சட்டம் எந்த விதமான அதிகாரமும் கொடுக்கவில்லை என்று கூறியது.

பரிந்துரை
இந்த பரிந்துரை 19 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டன. இப்போதே இதே பரிந்துரையைதான் தமிழ்நாடு அரசு தங்கள் சட்டத்திற்கு அஸ்திரமாக எடுத்துக்கொண்டு உள்ளது. இதே பரிந்துரை மையமாக வைத்தே தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை இயற்றி உள்ளது. குஜராத், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே துணை வேந்தர்களை மாநில அரசுகள்தான் நியமிக்கிறது.
Recommended Video

சட்ட ரீதியாக வாய்ப்பு
இதனால் இந்த சட்டத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியே ஆக வேண்டும். சட்டப்படி அவருக்கு வேறு வழியில்லை. இதை திருப்பி அனுப்பவும் வேறு வலுவான காரணம் இல்லை. இந்த பரிந்துரையை அரசு பயன்படுத்தி உள்ளதால் சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவி வருகிறது. குஜராத், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இதே பரிந்துரை பின்பற்றப்படுவதால், தமிழ்நாடு அரசும் அதே பரிந்துரையை பயன்படுத்தி ஆளுநருக்கு செக் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications