அதோ அங்க பாருங்க.. அருகே அழைத்து காட்டிய ஸ்டாலின்.. அப்படியே மாறிய மோடி முகம்.. என்னதான் இருந்தது?
சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நேற்று தமிழ்நாடு வந்த போது பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான விஷயம் ஒன்றை கை நீட்டி காட்டினார். அதை பார்த்ததும் பிரதமர் மோடியின் ரியாக்சன் அப்படியே மாறியது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயரும்.
அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நேற்று தமிழ்நாடு வந்த போது பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான விஷயம் ஒன்றை கை நீட்டி காட்டினார். அதை பார்த்ததும் பிரதமர் மோடியின் ரியாக்சன் அப்படியே மாறியது.
அதன்படி நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த போது பிரதமர் மோடி ஒரு பக்கம் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரை இழுத்த முதல்வர் ஸ்டாலின் அங்கே பாருங்கள் என்று கையை காட்டினார். அங்கே பார்த்த பிரதமர் மோடியின் ரியாக்சன் அப்படியே மாறியது. அவரின் முகம் சட்டென மாறியது. அதுவரை அமைதியாக இருந்தவர் சட்டென உற்சாகமாக சிரிக்க தொடங்கினார்.
அப்படியே முகம் மலர்ந்து அவர் சிரிக்க தொடங்கினார். மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அங்கே பாஜகவினர் சிலர் வரிசையாக காவி தொப்பி அணிந்து இருந்தனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தொப்பியை அவர்கள் அணிந்து இருந்தனர். இதை பார்க்காமல் மோடி இருந்த நிலையில், அந்த தொண்டர்கள் எங்களை பாருங்கள் என்பது போல கையசைத்தனர்.

இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அழைத்து அவர்களுக்கு இதை காட்டினார். இதையடுத்தே பிரதமர் மோடியின் ரியாக்சன் அப்படியே மாறியது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications