டிகே சிவக்குமாரிடம்.. பர்சனலாக பேசிய ஸ்டாலின்.. சொன்ன அந்த பாயிண்ட்.. மீட்டிங்கில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் கடந்த 22-ந்தேதி சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த இந்த கூட்டத்தில், 3 மாநில முதல்வர்கள் உட்பட 22 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

MK Stalin

தமிழ்நாடுதான் இது போன்ற விவகாரங்களில் மக்களின் உரிமையை காக்கிறது, மாநிலங்களின் உரிமையை காக்கிறது என்று போஸ்ட் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஸ்டாலினும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஏனென்றால் இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை இரண்டையும் பற்றி முதலில் குரல் கொடுத்தது ஸ்டாலின்தான். இதற்காக கூட்டத்தை கூட்டியதும் ஸ்டாலின்தான். பல மாநில தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளதால் அந்தந்த மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தை தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம்.. இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என நம்புகிறேன். மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம்..தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார். மேலும், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் கூட்டம் தான் இந்த சென்னை கூட்டம், என்று கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இதில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை மட்டும் தனியாக சந்தித்து 30-நிமிடங்கள் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருடம் உதயநிதி, கனிமொழி, முதல்வரின் தங்கை செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் சிலர் இருந்தனர். இந்த சந்திப்பில், பெர்சனல் ரீதியாக பல விசயங்கள் பேசப்பட்டதாக தகவலறிந்த அதிமுக மற்றும் பாஜக தரப்பினர், விவாதிக்கப்பட்டது என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில், "கர்நாடக மாநிலத்தில் கலைஞர் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. அது குறித்து விவாதித்திருக்கிறார்கள். மேலும், திமுகவுக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் தொடர்பாக சில உதவிகள் கேட்டும் சிவக்குமாரிடம் ஆலோசித்திருக்கிறார்கள்" என்று அதிமுக, பாஜக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+