பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி விவாதித்தது என்ன? போட்டுடைத்த அதிமுக கல்யாணசுந்தரம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவாதித்தது என்ன என்பது தொடர்பாக அதிமுக நிர்வாகி கல்யாண சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். நிதி விவகாரங்களைக் காரணம் காட்டி திமுக வேண்டுமென்றே ஒரு கருத்தை உருவாக்கி வருவதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டம் வந்து விமான நிலைய விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த மோடி, இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இதனிடையே நேற்று திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர். பிரதமர் மோடியை வரவேற்க ஓபிஎஸ் தரப்பில் அனுமதி கோடி கடிதம் அனுப்பிய நிலையில், கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பை மட்டும் பிரதமர் மோடி சந்தித்தார்.
இதன்பின் கோர்டுயார்டு ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி கல்யாணசுந்தரம் பேசுகையில், பிரதமர் மோடியின் தமிழக பயணம் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டும் மீண்டும் நிலுவை நிதியைத் தாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்று கூட்டணியில் இருப்பதால், ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் கோரிக்கை வைப்பற்கும் நிறைவேற்றியதற்கும் இடையிலான இடைவெளி நீண்ட காலமாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கருணாநிதியும் இப்படிதான் நிதிக்காக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். மீனவர்கள் கொலை செய்யப்படும் போது காங்கிரஸ் ஆட்சியில் கடிதம் மட்டுமே எழுதினார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிதி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளின் ஆட்சியிலும் சிக்கல் இருப்பது உண்மை தான்.
அதிமுக ஆட்சியின் போது நிதியைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் நிதியை மட்டுமே பிரதானமாக ஒரு கோரிக்கையாக வைத்து அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக ஒரு கருத்தை உருவாக்கப் பார்க்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சந்தித்து வரவேற்றார். அங்கு அரசியல் ரீதியாகப் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி!












Click it and Unblock the Notifications