சட்டநிபுணர்களுடன் பேசுகிறேன்.. கிருஷ்ணசாமி செய்த மூவ்.. கவனித்த ஆளுநர் ரவி.. சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் ரவியிடம் மனு கொடுக்க பேரணி நடத்த தமிழக காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். அனுமதி மறுக்கப்பட்டது. அதை மீறி பேரணி நடத்திய கிருஷ்ணசாமி, அவரது மகன் ஸ்யாம் உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சியினரை கைது செய்தது போலீஸ். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

puthiya tamilagam

இது குறித்து ராஜ்பவனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணசாமியை குறித்து நிறைய தகவல்களைக் கேட்டறிந்து தெரிந்து கொண்டிருக்கிறார் கவர்னர் ரவி.

இதனை தொடர்ந்து, இன்று சந்திக்க அவரை அழைத்துள்ளது ராஜ்பவன். அதன் பேரில் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னரை சந்தித்தார் கிருஷ்ண சாமி.

இந்த சந்திப்பில் தாங்கள் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை கொடுத்த கிருஷ்ணசாமியிடம், "அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இருக்கும் போது அதை எப்படி ரத்து செய்ய முடியிம் ? " என்று கவர்னர் கேள்வி எழுப்பியதாகவும்,
அதற்கு, "பட்டியல் இனத்திற்கான இடஒதுக்கீடு தேசிய அளவிலானது. அதில் மாநில அரசு திருத்தம் செய்ய அதிகாரமில்லை" என கிருஷ்ணசாமி விளக்கமளித்ததாகவும் புதிய தமிழகம் கட்சியினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

விளக்கத்தைத் தொடர்ந்து, "உங்கள் கோரிக்கை குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசிக்கிறேன்" என்று மட்டும் சொல்லியிருக்கிறார் கவர்னர் ரவி.

இந்த சந்திப்பில், தமிழக அரசியல் சூழல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாடு என பலவற்றையும் விவரித்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3% உள் ஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் மூலம் அனுமதிக்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில்தான் தீர்ப்பளித்தது.

2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இதன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

இது அப்போதைய திமுக அரசு மூலம் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். மாநிலத்தில் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு தற்போது 18% ஆக உள்ளது. அதில் தமிழக அரசு அருந்ததியருக்கு 3% இடஒதுக்கீட்டை வழங்கியது. இதை பட்டியலினப் பிரிவினரில் உள்ள அருந்ததியற்றவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இதன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. சட்டத்தின்படி ஒரு சாதியை உட்பிரிவாக பிரிப்பதில் மாநிலங்களுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதன் அடிப்படியில் இடஒதுக்கீட்டை உள்ஒதுக்கீடாக வழங்குவதற்கும் தடை இல்லை.

இதை அடிப்படையாக வைத்தே அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது . இப்படிப்பட்ட நிலையில்தான் அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+