Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்த்தாய் வாழ்த்து! தமிழ்நாட்டின் நீண்ட கால மரபை மாற்ற சொன்ன ஆளுநர் ரவி! ஏற்காத அரசு! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் நீண்ட கால மரபை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. சட்டசபைக்கு முன் இந்த கோரிக்கையை ஆளுநர் வைத்துள்ளார். ஆனால் அப்போதே அவரின் கோரிக்கை மறுக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி தொடங்கும் முன் போடப்படும். அதேபோல் தேசிய கீதம் நிகழ்ச்சி முடிந்த பின் போடப்படும்.

What did Governor RN Ravi ask to the Tamil Nadu government on Tamil Thai Vazhthu?

தமிழ்நாடு சட்டசபையிலும் இதுவே விதிமுறையாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி இந்த விதியை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு. ஆனால் அதனை மாற்றக் கோரி தனது உரையை புறக்கணித்திருக்கிறார்.

இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

தமிழ்நாடு அரசின் நீண்ட கால மரபை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இதுவே இன்று சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்க காரணம் ஆகும்.

அப்பாவு வாசித்தார்; இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது., தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது;

தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது., என்று கூறியுள்ளார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+