Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸை பார்த்ததும்.. மோடி கேட்ட கேள்வி.. ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? 10 நிமிடம் பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பில் மோடி ஓ பன்னீர்செல்வம் இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    ADMK பொதுக்குழு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஓ பன்னீர்செல்வம் நினைத்ததை சாதித்துவிட்டார் .. விடாப்பிடியாக இருந்து காரியத்தை முடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ஆம் ஓ பன்னீர்செல்வம் கடைசி வரை மனம் தளராமல் ஒரு வழியாக பிரதமர் மோடியை இன்று சந்தித்துவிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் மோடியை தனியாக சந்திக்க முடியாத நிலையில்.. ஓ பன்னீர்செல்வம் கஷ்டப்பட்டு மோடியை சந்தித்து பேசிவிட்டார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    இன்று சென்னை அண்ணா பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழா முடித்த பின் 11.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அஹமதாபாத்திற்கு மோடி செல்வதாக பயணம் திட்டம் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து மோடியை 10 நிமிடம் சந்திக்க ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடைசி நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் மோடியை சந்தித்து பேசினார்.

    ஓபிஎஸ் பேட்டி

    ஓபிஎஸ் பேட்டி

    இவர்கள் இருவரும் 10 நிமிடம் என்ன பேசினார்கள் என்ற முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த சந்திப்பு பற்றி ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி என்னிடம் உடல்நிலை பற்றி விசாரித்தார். உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். நன்றாக இருக்கிறது என்று சொன்னேன், என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கை உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    பொதுக்குழு

    பொதுக்குழு

    பொதுக்குழு தொடர்பான உத்தரவை உங்களுக்கு சாதகமான உத்தரவாக பார்க்கிறீர்களா? என்று இன்னொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும், என்று ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார். இன்று உச்ச நீதிமன்றதில் ஓபிஎஸ் - இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று இரண்டு தரப்பும் வாதம் வைத்தது. இதை பற்றியும் ஓ பன்னீர்செல்வமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    பதில் அளிக்க மறுப்பு

    பதில் அளிக்க மறுப்பு

    இதற்கு ஓ பன்னீர்செல்வம் பதில் அளிக்க மறுத்து அமைதியாக இருந்தார். இன்னொரு செய்தியாளர் உங்களிடம் பிரதமர் மோடி என்ன சொன்னார். அவர் என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளிக்க மறுத்து அமைதியாக இருந்தார். இதையடுத்து மேற்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து கிளம்பி சென்றார். மோடியிடம் ஓ பன்னீர்செல்வம் பேசியது என்ன என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+