சரியாக 1 நாளுக்கு முன்.. பிரதாப் போத்தன் போட்ட உருக்கமான பேஸ்புக் பதிவு.. இவ்ளோதாங்க வாழ்க்கை!
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபலமாக வலம் வந்த நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட சில பதிவுகள் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது
Recommended Video
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் போத்தனுக்கு 70 வயதாகிறது. உடல் நலக்குறைவால் கஷ்டப்பட்டு வந்த அவர் இன்று காலை காலமானார்.
அழியாத கோலங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதோடு மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை இவர் இயக்கி உள்ளார். இவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதாப் போத்தன்
இந்த நிலையில் பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட சில பதிவுகள் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. இன்று அவர் மரணம் அடைந்த நிலையில் நேற்றுதான் காதல்.. அன்பு.. மரணம்.. வாழ்க்கை என்று பல விஷயங்களை பற்றி போஸ்ட் செய்து இருக்கிறார். நேற்று ஒரே நாளில் பல ஆழ்ந்த கருத்துக்களை பதிவிட்ட பிரதாப் போத்தன் இன்று காலமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்
பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக் போஸ்ட் ஒன்றில், சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன் என்று ஏஏ மில்னே என்பவற்றின் வரிகளை குறிப்பிட்டு இருக்கிறார். இன்னொரு போஸ்டில் ஜார்ஜ் கார்களின் என்பவரின் வரிகளை பகிர்ந்து இருக்கிறார். மரணம் என்பது நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது என்று அதில் பிரதாப் போத்தன் குறிப்பிட்டுள்ளார்.

போஸ்ட்
தினமும் எச்சில்களை நீண்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் விழுங்குவதால்தான் மரணம் ஏற்படுகிறது என்று பிரதாப் அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடு இன்னொரு பதிவில், நீங்கள் ஒரு நோயின் காரணத்தை, ஆணிவேரை குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை குணப்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் கடைசி வரை மருத்துவமனையை நம்பித்தான் இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை
நேற்று அவர் செய்த இன்னொரு பதிவில்.. வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்துவிடும் என்று சலிப்பாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சினிமா போன்ற கலைகள் எல்லாம் கலைஞர்கள் தங்களுடைய இருப்பை வெளியே காட்டிக்கொள்ள பயன்படுத்தும் ஊடகம் என்று ஜிம் மோரிசன் என்பவர் சொன்ன வரிகளையும் பிரதாப் போத்தன் பகிர்ந்து இருக்கிறார். அவரின் இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.

12 மணி நேரம்
சரியாக மரணம் அடைவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு கூட பிரதாப் போத்தன் காதல்.. வாழ்க்கை.. மரணம் குறித்துபேசி இருப்பது சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் இவர் பிரபலம் என்பதால் பல சினிமா பிரபலங்கள் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் திடீர் மரணம் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications