மகாபலிபுரம் லாட்ஜுக்கு காதலனுடன் சென்ற சங்கீதா.. அங்கு இருந்த காட்சியை பார்த்து ஆடிப்போன ஊழியர்கள்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள சித்திரவாடி கிராமத்தை ஜெயராஜ் என்பவரும், அதே பகுதியில் உள்ள பவுன்சூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சங்கீதா காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.சங்கீதாவும், ஜெயராஜூம் மகாபலிபுரத்திற்கு சென்று அறை எடுத்து தங்கியுள்ளனர். ஆனால் லாட்ஜில் இருந்து சங்கீதா கடைசி வரை வெளியே வரவில்லை.. நடந்தது பற்றி பார்ப்போம்.
கள்ளக்காதல் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணத்தை மீறிய உறவு காரணமாக ஏற்படும் இழப்புகள் இரண்டு குடும்பங்களுக்கும் மிகவும் அதிகம். ஒரு வேளை திருமண உறவு பிடிக்கவில்லை என்றால் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு தான் துணையை தேட வேண்டும். குடும்ப பிரச்சனைகளை வெளியில் சொல்லி ஆறுதல் தேடும் போது, அடுத்த வீட்டில் உள்ள பிரச்சனைக்கு ஆறுதல் கூறுவதாக பேசுவதும் பெரும்பாலும் கள்ளக்காதலில் முடிகிறது. கிராமங்களில் நடைபெறும் கள்ளக்காதலுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது. இப்படி ஏற்படும் கள்ளக்காதல் மிகப்பெரிய விபரீதத்தில் தான் முடிகிறது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடந்த சம்பம் பற்றி பார்ப்போம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து உள்ள கிராமம் சித்திரவாடி . இந்த கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் ஜெயராஜ்க்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர் மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டையில் உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மதுராந்தகம் அடுத்த பவுன்சூர் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் சங்கீதாவுக்கு திருமணம் ஆகி 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சங்கீதா காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். வேலைக்கு வந்து செல்லும்போது ஜெயராஜூடன் சங்கீதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் சங்கீதாவின் கணவருக்கு தெரிய வந்ததையடுத்து அவர் கடுமையாக கண்டித்தார்.
இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாயார் வீட்டில் சங்கீதா வசித்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து ஜெயராஜுடன் கள்ளத்தொடர்பு தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்திற்கு ஜெயராஜூடன் சங்கீதா மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் சங்கீதாவும் ஜெயராஜூம் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஜெயராஜ் சங்கீதாவிடம், நீ பல பேருடன் செல்போனில் பேசுவது ஏன் என்று கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் உணவு வாங்கி வருவதற்காக ஜெயராஜ் வெளியே சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது சங்கீதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், விடுதி ஊழியர்களிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தார். அதன் பேரில் மாமல்லபுரம் டிஎஸ்பி ரவிஅபிராம், மாமல்லபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெயராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications