கிராமத்தில் கூட ஓரினச்சேர்க்கையாளர் உள்ளனர்.. LGBTQ+ வழக்கில் தலைமை நீதிபதி பரபரப்பு கருத்து!
சென்னை: ஓரினச்சேர்க்கை என்பது நகர்ப்புறக் கருத்தோ அல்லது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது மட்டும் அல்ல. இது பொதுவானது. எந்த தரப்பினர் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம்., நாங்கள் சட்டங்களை உருவாக்க இல்லை. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நாடாளுமன்றம்தான் சட்டங்களை உருவாக்க வேண்டும். என்று ஓரினச்சேர்க்கை திருமண வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாகச் அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மே 11ஆம் தேதி விசாரணை முடிந்த பின் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.

இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் 4 தீர்ப்புகள் உள்ளன. நான், நீதிபதி கவுல், நீதிபதி பட் மற்றும் நீதிபதி நரசிம்ஹா ஆகியோரின் தீர்ப்பு தனி தனியாக வழங்கப்பட உள்ளது. ஓரினசேர்க்கை என்பது நகர்ப்புற மக்களுக்கு மட்டுமானது அல்ல. ஓரினசேர்க்கையில் நகர்ப்புற மக்கள் மட்டும் ஈடுபடுகிறார்கள் என்று கூற முடியாது. அதேபோல் பணக்கார மக்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று கூற முடியாதது.
ஓரினச்சேர்க்கை என்பது நகர்ப்புறக் கருத்தோ அல்லது சமூகத்தின் உயர் வகுப்பினருக்கானது மட்டும் அல்ல. இது பொதுவானது. எந்த தரப்பினர் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். ஒயிட் காலர் வேலையில் உள்ள பணக்கார ஆங்கிலத்தில் பேசும் ஆண் மட்டுமே ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறிக்கொள்ள முடியாது. ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும் பெண் கூட ஓரினச்சேர்க்கையாளர் ஆக இருக்கலாம். மேலை இடங்களில், பணக்காரர்களின் பகுதிகளில் மட்டுமே ஓரினச்சேர்க்கையாளர் உள்ளனர் என்ற கருத்தை முதலில் மாற்ற வேண்டும். முதலில் இதை ஒழிக்க வேண்டும்.
நகரத்தில் வாழும் எல்லோரும் பணக்காரர்கள் என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் ஜாதி, பொருளாதாரம் இதை எல்லாம் தாண்டி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியும். திருமண சட்டம் என்பது நிலையான சட்டம் கிடையாது. திருமண விதிகள் என்பது நிலையானது என்று அரசு வாதம் வைத்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் திருமண சட்டத்திலேயே நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதனால் இதை நிலையானது என்று சொல்ல முடியாது.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்றுக்கொள்ள கூடியதாக மாறி இருக்கிறது அதேபோல முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகிறது சதி மற்றும் குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும். நீதித்துறை மறு ஆய்வு மற்றும் அதிகார பகிர்வு பிரச்சனையை கையாளக் கூடியது அதிகாரங்களை பிரிக்கும் கோட்பாடு என்பது அரசின் மூன்று துறைகளுக்கும் தனித்தனியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதில் ஒரு துறையில் மற்றொரு துறை செயல்பாட்டை மேற்கொள்ள முடியாது
நாங்கள் சட்டங்களை உருவாக்க இல்லை. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நாடாளுமன்றம்தான் சட்டங்களை உருவாக்க வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. திருமணத்தில் நுழைவதற்கான உரிமையை எல்லோருக்கும் வழங்க வேண்டும். அந்த உரிமையில் ஒருவரின் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் அந்த திருமணத்தை அங்கீகரிக்கும் உரிமை ஆகியவையும் அடங்கும். ஒருவரின் சுதந்திரத்தை உறுதி செய்யாதது என்பது அதை தடுப்பதற்கு சமம் ஆகும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications