"ஹாட் சார்ட்".. சென்னைக்கு மிக முக்கிய வார்னிங் தந்த தமிழ்நாடு வெதர்மேன்.. வானிலையில் மாற்றம்?
சென்னை: சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கதேசம் மற்றும் மியான்மரை மோச்சா புயல் தாக்கியது. 240 கிமீ வேகத்தில் இந்த புயல் காரணமாக கடுமையான காற்று வீசியது.
சூப்பர் சூறாவளியாக இந்த புயல் மியான்மரில் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.

இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட்:
இந்த நிலையில் சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதில், சென்னையில் மீண்டும் இன்று அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும். ஏனென்றால் கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும்
இதனால் அந்த பகுதிகள் சூடாக இருக்கும். 40டிகிரி செல்ஸியஸ் பின்வரும் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் து.மலையின் சில பகுதிகள், டுட்டியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள்.
சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் & கரூர் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகள் சூடான பகுதிகளின் லிஸ்டில் அதாவது ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
வானிலை நிலவரம்
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications