அண்ணா முதல் ஸ்டாலின் வரை.. இந்து கோயில்களுக்கு திமுக செய்தது என்ன? ... பட்டியல் இதோ…
சென்னை: திமுகவின் தாய் வீடு திராவிடர் கழகம். அதன் ஆணிவேர் பெரியார். அவர்தான் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஆழமாகத் தமிழ்நாட்டில் விதைத்தார். அதே திராவிடர் கழகத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையுடன் இருந்தவர்தான் அண்ணா.
ஆனால், அவர் தனியாகப் பிரிந்துவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக ஆரம்பித்த போது அதன் கொள்கையாகக் கடவுள் மறுப்பை அவர் முன்னிறுத்தவில்லை.

அதில் லேசான மாற்றத்தைக் கொண்டுவந்தார். 'கடவுள் இல்லை. கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை' என்ற பெரியாரின் கருத்திலிருந்து விலகி, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார்.
ஆகவே, அங்கிருந்தே தொடங்கியது திராவிடர் கழகம் வேறு திராவிட முன்னேற்றக் கழகம் வேறு என்ற சின்னஞ்சிறிய வேறுபாடு. நாட்டில் உள்ள பெரு பாண்மையான மக்கள் கடவுள் நம்பிக்கையில் உறுதியாக உள்ளபோது, கடவுள் மறுப்பை முன்வைக்கும் ஒரு அரசியல் கட்சியால் மக்களை தன்வயவைப்படுத்த முடியாது என்று அண்ணா நம்பியதன் அடையாளம்தான் இந்தக் கொள்கை மாற்றம்.

ஆகவே, கடவுள் விஷயத்தில் அண்ணா, பெரியாரை முன்மாதிரியாகக் கொள்ளாமல் திருமூலரின் கருத்தை அரசியல் மயமாக்கினார்.
அண்ணா, கடவுள் மறுப்பிலிருந்து பெரியாரிடமிருந்து விலகினாலும், அந்த இயக்கத்தின் அஸ்திவாரமான இருந்த சமூகநீதி, சுயமரியாதை திருமணம், சாதிய ஏற்றத்தாழ்வு போன்ற வலுவான காரணிகளை அப்படியே ஏற்றார்.
அதன்பின்னர் அவர் கடவுள் மறுப்புக் கொள்கைகளை முன்வைத்துப் பேசியதே இல்லை. 1967இல் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அவரை தோற்கடிக்கக் காங்கிரஸ்காரர்கள் ஓட்டு 5 ரூபாய் கொடுத்தனர். அந்தத் தகவல் அண்ணாவின் காதுக்குச் சென்றது.

அப்போது, 'இந்த அண்ணாதுரையைத் தோற்கடிக்க யாரைத் துணைக்கு அழைத்து வருகிறார்கள் தெரியுமா? ஏழு மலை ஏறி திருப்பதி வெங்கடேச பெருமாளை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். பரவாயில்லை அவர்தானே வருகிறார், வரட்டும்.
இந்த அண்ணாதுரையைத் தடுக்கவேண்டுமானால், 5 ரூபாய்கூட போதாது. தீராத வல்வினை எல்லாம் தீர்த்துவைப்பவனை அழைத்துக்கொண்டு வந்து, அவன் படத்தின் மீது 5 ரூபாய் வைத்து சத்தியம் பெறுகிறீர்கள்.
பணத்தைப் பெறும் தாய்மார்களிடம் ஒன்றைச் சொல்கிறேன். அந்தத் தட்டில் உள்ள படத்தை உற்றுப் பாருங்கள். அந்தத் தெய்வம் ஏன் ஏழு மலைக்கு அப்பாலே இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தீர்களா? இந்த நாட்டில் உள்ள அக்கிரமம் தாங்க முடியாமல்தான் தொலைவாகப் போய்விட்டது' என்று பேசினார்.
அப்போதும் அவர் கடவுளை விமர்சிக்கவில்லை. அநியாயக்காரர்களைத்தான் விமர்சித்தார். தெய்வம் எப்படி உங்கள் அக்கிரமங்களுக்குத் துணையாக இருப்பார் என்று கேள்வி கேட்டார்.

அண்ணா அமைச்சரவையில்பொதுப்பணித்துறை அமைச்சராக மு.கருணா நிதி கும்பகோணம் மகாமகம் விழாவைச் சிறப்பாக நடத்தினார் என்பது முக்கியமான செய்தி.
அவரது மறைவுக்குப் பின் திமுகவின் தலைமையேற்ற மு.கருணாநிதி, அண்ணாவைக் காட்டிலும் கடவுள் மறுப்புக் கொள்கையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். ஆனால், அவர் தனது கடவுள் மறுப்புக் கொள்கையைக் கட்சி மீது திணிக்கவில்லை.
மு.கருணாநிதி முதன்முறையாகப் பதவிக்கு வந்ததும் அவரது சொந்த ஊரான திருவாரூரில் தேர்த் திருவிழாவை நடத்தினார். ஒரு மடத்தின் தலைவராக இருந்த குன்றக்குடி அடிகளாரை எம்.எல்.சி. ஆக ஆக்கினார்.

பலரும் திமுகவையும் திமுகவையும் போட்டு அடிக்கடிக் குழப்பிக் கொண்டனர். கடவுள் மறுப்பு பாதையை திமுக எப்போது உயர்த்தி பிடித்ததில்லை. அதன் தலைவராக இருந்த மு.கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டினார்.
1992இல் திராவிட ஆட்சி 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இதே விவாதம் மேலே எழுந்தது. அப்போது திமுகவின் மூளையாக அடையாளம் காணப்பட்ட முரசொலி மாறன் ஒரு பேட்டி அளித்தார்.
அதில் அவர், "நிறையப் பேர் கோயில்களுக்குப் போகிறார்கள் என்பதனாலேயே திராவிட இயக்கம் தோற்று விட்டது என்று சொல்வது சரியாகாது.

திராவிட இயக்கக் கொள்கைகளில் ஒன்று பகுத்தறிவு. சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கியமான கொள்கைகள்" என்று விளக்கம் அளித்தார்.
மு.கருணாநிதி, வாழ்ந்த காலத்தில்கூட அவர் தனது வீட்டுப் பெண்மணிகளுக்குக் கடவுள் வழிப்பாட்டு முறையில் முழு சுதந்திரத்தைக் கொடுத்தார். பொதுவெளியில் அவர்கள் தங்களின் கடவுள் பக்தியை எந்தக் காலத்திலும் திரை போட்டு மறைக்க வேண்டிய அவசியத்தை அவர் தந்ததே இல்லை.
அன்று முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது மு.கருணாநிதி, எப்படி திருவாரூர் தேரை ஓட்டிக் காட்டினாரோ அதைப் போன்று இப்போது முதன்முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், அவரது 2 ஆண்டுகால ஆட்சியில் கிட்டத்தட்ட 1000 கோயில்களுக்கும் மேலாகக் குடமுழுக்கு விழாவை நடத்திக் காட்டி இருக்கிறார்.

தஞ்சை ராஜராஜ சோழனின் 1000 ஆவது ஆண்டு விழா வந்தபோது அதை அரசு விழாவாகக் கொண்டாட அன்றைய முதல்வர் கருணாநிதி முடிவு செய்தார். அது ஆட்சிக்கு எதிராக அமையும் எனச் சிலர் அவரை எச்சரித்ததாகத் தகவல்கூட பரவியது.
ஆனால், அந்த மூட நம்பிக்கைகளுக்கு இடம்தராமல் ராஜராஜனின் 1000ஆவது விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார் கருணாநிதி.
தமிழ்நாடு முழுவதும் 4,724 கோயில்களில் 523 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் இவரது திமுக ஆட்சியில் நடைபெற்றது. கிராமக் கோயில் பூசாரிகளுக்கு என்று நல வாரியமும் அமைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு 10 ஆயிரம் பூசாரிகளுக்குச் சைக்கிள் வழங்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தது

அதைப்போலவே திமுக ஆட்சியில்தான் 2.10.70 அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களை அனுமதிக்கும் சட்டம் இயற்றியது திமுக ஆட்சி. அதைச் செய்தவர் கலைஞர். இதன் நீட்சியாக இன்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 3 பெண் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
சில நாட்கள் முன்னதாக 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக் களை இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அன்றைக்குத் தனிநபர்களிடம் சிக்கிக் கிடந்த திருமடங்கள் மற்றும் கோயில்களின் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு எடுத்து அரசின் கஜானாவுக்குக் கொண்டு வந்தார் மு. கருணாநிதி. இவர் ஆட்சியில் 432 கோயில்களுக்கு 8484 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப்பட்டன என்பதை ஆன்மிகவாதிகள் அறிவர்.

மேலும் 2006- 07 திமுக ஆட்சிக் காலத்தில் 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன. 5 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கும் நடைபெற்றன. பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர்களின் 70 கோயில்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் 17.50 லட்சம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கோயில்களுக்கு வழங்கப்படும் 75 லட்ச ரூபாய் நிதி, 3 கோடியாக உயர்த்தப்பட்டது.
இப்படி திமுகவின் ஆன்மிக சார்ந்த நலத்திட்டங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. பக்கத்தார்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் 2002-ஆம் முதல் செயல்பட்டு வருகிறது. இதனை 2021-2022 ஆம் நிதியாண்டில் விரிவுபடுத்தி திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுதும் அன்னதானம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டு, அது தற்போது செயல்பட்டு வருகிறது.
வள்ளலாரின் 200 ஆண்டுவிழாவை மிகச் சிறப்பாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் விமர்சையாக கொண்டாடியது. இவரது ஆட்சியில்தான் 30 லட்சம் கோயில் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி வரை செலவழித்துள்ளது திமுக அரசுதான்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications