'டாஸ்மாக்கை எப்படி நடத்தனும்னு'.. ஒரே வரியில் பதில் சொன்ன சென்னை ஹைகோர்ட்.. பரபரப்பு வழக்கு
சென்னை: டாஸ்மாக் மதுபான வணிகத்தை எப்படி நடத்துவது என்பது அரசுக்கு தெரியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபத்தில் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பரிதாபமாக இறந்து விட்டதாகவும், இதேபோல கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்திலும், மதுராந்தகத்திலும் சுமார் 22 பேர் உயிரிழந்து விட்டதை குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பார்களில் மதுபானங்களை விற்கவோ, சேமித்து வைக்கவோ சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள பல டாஸ்மாக் பார்களிளும் போலீஸார் மற்றும் கலால்துறை அதிகாரிகளின் துணையுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,
எனவே டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா, அதில் எத்தனை சதவீதம் எத்தில் ஆல்கஹால் உள்ளது மற்றும் அந்த மதுபான வகை அருந்த உகந்ததா என்பதை உறுதி செய்யும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதி்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மதுபானங்களை, அருகில் உள்ள பார்களில் வைத்து விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லக்சுமிநாரயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் டாஸ்மாக் வணிகத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து அரசுக்கு தெரியும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
-
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications