பாயிண்டை பிடித்த விஜய்.. ஆளுநர் ரவியிடம் சொன்ன அந்த மேட்டர்.. பக்கா பிளானோடு போய் இருக்காரு போல!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். அவருக்கு எங்களின் நன்றி, என்று அறிக்கையில் கூறி உள்ளனர்.

வேறு ஒரு விஷயம்:
இந்த சந்திப்பில் வேறு ஒரு முக்கிய விஷயத்தை விஜய் பேசி இருக்கிறாராம். அதன்படி அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு அரசியல் பின்னணி உள்ளது. அதை விசாரிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளாராம்.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.
இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த சார் யார்... அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த சார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ஞானசேகரன் திமுக தலைவர்கள் பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இப்படிப்பட்டநிலையில் தான் அதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளாராம். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு அரசியல் பின்னணி உள்ளது. அதை விசாரிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளாராம்.

ஞானசேகரன் உடன் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம். அவர்களை பற்றி விசாரிக்க வேண்டும். இதில் தொடர்பு உள்ள யாரையும் தண்டிக்காமல் விடக்கூடாது என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications