விஜய் விட்டது என்ன? தொட்டது என்ன? மாநாடு முடிந்து ஒரு மாதம் எப்படி?
சென்னை: தவெக மாநாடு முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான கட்சியாக இந்த ஒரு மாதத்தில் விஜய்யின் செயல்பாடு எந்தளவுக்கு இருந்துள்ளது? அவர் மறந்த விஷயங்கள் என்ன? தவறவிட்டது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் திருவிழா மாநாடு முடிந்து ஒரு மாதம் முடிந்துள்ளது. அதை அந்தக் கட்சி தனது யூடியூப்பில் அது பற்றிய ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இந்த ஒரு மாதக் காலத்தில் அரசியல் ரீதியாக தவெகவும் விஜய்யும் எந்தளவுக்கு மக்கள் பணியில் அதிக ஈடுபாடு காட்டி இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வியாக மாறி இருக்கிறது.

மாநாடு முடிந்த பிறகு கடந்த 4 நாட்கள் முன்னதாக தங்களுக்கு இடமளித்த நில உரிமையாளர்களை குடும்பத்துடன் அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து அனுப்பியுள்ளார் விஜய். முதல் மாநாடு என்பதால் இதைப் போன்ற விசயங்களை அவர் செய்துள்ளார். பல மாநாடுகளை நடத்திய கட்சிகளின் இடத்தை நோக்கி முன்னேறும் போதே இதே உபசரிப்பை அவரால் செய்ய முடியுமா? அதற்கு அவர் தயாராக இருப்பாரா? என்பது அடுத்தடுத்து எழும் கேள்விகள்.
இப்போதைக்கு முதல் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டிய மக்களை அவர் அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார். நிச்சயம் அந்தப் பகுதி மக்களை அது இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை இதே விக்கிரவாண்டி செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகி விஜய் அந்தத் தொகுதியை நின்றால், 2026 இல் அவருக்கு மற்ற இடங்களைவிடக் கூடுதல் ஆதரவு கிடைக்கலாம்.
அவரது சாய்ஸ் விக்கிரவாண்டியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படவே செய்கின்றன. அவரது ரசிகர்களும் அங்கே அவர் நிற்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆக, அரசியலில் எந்தக் காயும் சும்மா வெட்டுப்படுவதில்லை. விஜய் காய் நகர்த்தலுக்குப் பின்னால் ஒரு பெரிய பிளான் இருக்கக்கூடும்.
இந்த மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்ற விமர்சனம் ஒலிக்கத் தொடங்கிய பிறகு அவர்களுக்கு உரிய அஞ்சலியைக் கட்சி செயற்குழுவில் செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து இப்போதுதான் அந்தக் குடும்பங்களுக்கு உதவ விஜய் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அது என்ன மாதிரியான உதவி என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
விஜய் மாநாட்டுக்கு வேதாரண்யம் பகுதியிலிருந்த வந்த மகனைக் காணவில்லை என ஒரு தந்தை ஊடகங்களில் கதி கலங்கிப் போய் பேசி இருந்தார். அந்த முதியவரை இதுவரை விஜய் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அதைப் பற்றி அவர் ஒரு அறிக்கையும் விடவில்லை. அவருக்கு அந்தத் தகவல் தெரியுமா என்பது கூட புரியவில்லை.
மாநாடு முடிந்த ஒரு மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று பாஜக ஒரு விமர்சனத்தை வைத்தது. அதற்கு எந்தவிளக்கமும் விஜய் சொல்லவில்லை. ஆனால், தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் என்று திமுக பாணியில் ஒரு வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதற்கு முன் தேவர் ஜெயந்திக்கு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

ஜெயலலிதா ஸ்டைலில் எந்த சிலைக்கும் போய் மாலை போடாமல் அறையிலிருந்தபடியே முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருந்தார். அதன் பின்னர் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் பற்றி ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் தியாகி சங்கிரலிங்கனாரின் தியாகத்தை நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தவெக மாநாடு முடிந்தது முதல் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சீமானின் பிறந்தநாளான நவம்பர் 8 ஆம் தேதி அவருக்கு வாழ்த்து சொன்னார். அதற்கு முன்னதாக திரையுலக முன்னோடி கமல்ஹாசன் பிறந்தநாள் வந்தது. அதற்கு வாழ்த்தோ அல்லது ஒரு பதிவோ விஜய் வெளியிடவே இல்லை. அது பலருக்கும் சந்தேகத்தை அளித்திருந்தது.
ஆனால், கமல்ஹாசனைத் தெய்வம் எனப் பேசி வந்த அவரது நெருங்கிய நண்பர் டெல்லி கணேஷ் மறைந்தபோது அது பற்றி தனது இரங்கலை விஜய் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம்தேதி தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு சம்பவம் கிண்டி மருத்துவமனையில் நடைபெற்றது. ஒரு இளைஞர் தனது தாய்க்காக அரசு மருத்துவர் ஒருவரைக் கத்தியால் குத்தினார்.
அதைக் கண்டித்துப் பல தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பல கட்சித் தலைவர்கள் டாக்டரை நேரில் போய் சந்தித்தன. ஆனால், விஜய் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிக்கை மட்டுமே விட்டார். சம்பவம் நடந்த இடத்திற்கோ அல்லது டாக்டரை நேரில் சந்தித்தோ ஆறுதல் எதையும் சொல்லவே இல்லை.
இதன் பின்னர் குழந்தைகள் தின வாழ்த்து, சர்வதேச பெண்கள் பாதுகாப்பு தின அறிக்கை, பிரபாகரனின் பிறந்தநாளான 25 ஆம் தேதி அவரின் பெயரைக்கூடக் குறிப்பிடாமல் மாவிர்ரம் போற்றுகிறதும் என்று ஒரு பதிவு என எக்ஸ் தளத்திற்குள் மட்டுமே அரசியல் கட்சியை விஜய் நடத்தி வருகிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மகாராஷ்டிரா தேர்தல் நடந்த பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜாங்கண்டில் காங் கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பிரியங்கா கந்தி வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச அளவில் அதானி மீது மிகப்பெரிய புகார் எழுந்துள்ளது. இப்படிப் பல அரசியல் விவகாரங்கள் பற்றி எந்தக் கருத்தையும் விஜய் தெரிவிக்கவே இல்லை. அது குறித்து அவரது பார்வை என்ன? கருத்து என்ன என்பது ஒன்றும் புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் சிலர்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவர் தனது தொண்டர்களுக்கு இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறார்? இப்போது சமரி மலை ஐயப்பனைப் பற்றி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அது பற்றி தவெகவின் நிலைப்பாடு என்ன? என எதற்கு விஜய்யிடம் கிடைப்பது மவுனம்தான் நிலவுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி எனக் கடந்த ஒரு மாதமாகப் பலர் பேசி வந்த நிலையில், ஒரு செய்தித்தாளில் அது வெளியான பிறகுதான் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு வெளியிடுகிறார். ஆதாரமற்ற தகவல் என்கிறார். சில மூத்த பத்திரிகையாளர்கள் எடப்பாடியை விஜய் சந்தித்தார் என யூடியூபில் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள். அதை விஜய் தரப்பு மறுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. அம்பேத்கரைத் தனது கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்துள்ளார் விஜய். இந்திய அரசியல் கட்சிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடி வருகின்றன. அது பற்றி விஜய் தனது கருத்து என்ன? நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் தானும் தனது கட்சியும் எப்படிப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்காக ஒரு விளக்கத்தையும் வெளியிடவே இல்லை. சென்னை: தவெக மாநாடு முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான கட்சியாக இந்த ஒரு மாதத்தில் விஜய்யின் செயல்பாடு எந்தளவுக்கு இருந்துள்ளது? அவர் மறந்த விஷயங்கள் என்ன? தவறவிட்டது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் திருவிழா மாநாடு முடிந்து ஒரு மாதம் முடிந்துள்ளது. அதை அந்தக் கட்சி தனது யூடியூப்பில் அது பற்றிய ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இந்த ஒரு மாதக் காலத்தில் அரசியல்ரீதியாக தவெகவும் விஜய்யும் எந்தளவுக்கு மக்கள் பணியில் அதிக ஈடுபாடு காட்டி இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வியாக மாறி இருக்கிறது.
மாநாடு முடிந்த பிறகு கடந்த 4 நாட்கள் முன்னதாக தங்களுக்கு இடமளித்த நில உரிமையாளர்களை குடும்பத்துடன் அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து அனுப்பியுள்ளார் விஜய். முதல் மாநாடு என்பதால் இதைப் போன்ற விசயங்களை அவர் செய்துள்ளார். பல மாநாடுகளை நடத்திய கட்சிகளின் இடத்தை நோக்கி முன்னேறும் போதே இதே உபசரிப்பை அவரால் செய்ய முடியுமா? அதற்கு அவர் தயாராக இருப்பாரா? என்பது அடுத்தடுத்து எழும் கேள்விகள்.
இப்போதைக்கு முதல் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டிய மக்களை அவர் அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார். நிச்சயம் அந்தப் பகுதி மக்களை அது இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை இதே விக்கிரவாண்டி செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகி விஜய் அந்தத் தொகுதியை நின்றால், 2026 இல் அவருக்கு மற்ற இடங்களைவிடக் கூடுதல் ஆதரவு கிடைக்கலாம்.
அவரது சாய்ஸ் விக்கிரவாண்டியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படவே செய்கின்றன. அவரது ரசிகர்களும் அங்கே அவர் நிற்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆக, அரசியலில் எந்தக் காயும் சும்மா வெட்டுப்படுவதில்லை. விஜய் காய் நகர்த்தலுக்குப் பின்னால் ஒரு பெரிய பிளான் இருக்கக்கூடும்.
இந்த மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்ற விமர்சனம் ஒலிக்கத் தொடங்கிய பிறகு அவர்களுக்கு உரிய அஞ்சலியைக் கட்சி செயற்குழுவில் செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து இப்போதுதான் அந்தக் குடும்பங்களுக்கு உதவ விஜய் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அது என்ன மாதிரியான உதவி என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
விஜய் மாநாட்டுக்கு வேதாரண்யம் பகுதியிலிருந்த வந்த மகனைக் காணவில்லை என ஒரு தந்தை ஊடகங்களில் கதி கலங்கிப் போய் பேசி இருந்தார். அந்த முதியவரை இதுவரை விஜய் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அதைப் பற்றி அவர் ஒரு அறிக்கையும் விடவில்லை. அவருக்கு அந்தத் தகவல் தெரியுமா என்பது கூட புரியவில்லை.
மாநாடு முடிந்த ஒரு மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று பாஜக ஒரு விமர்சனத்தை வைத்தது. அதற்கு எந்தவிளக்கமும் விஜய் சொல்லவில்லை. ஆனால், தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் என்று திமுக பாணியில் ஒரு வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதற்கு முன் தேவர் ஜெயந்திக்கு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதா ஸ்டைலில் எந்த சிலைக்கும் போய் மாலை போலாமல் அறையிலிருந்தபடியே முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருந்தார். அதன் பின்னர் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் பற்றி ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவில் தியாகி சங்கிரலிங்கனாரை தியாகத்தை நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தவெக மாநாடு முடிந்தது முதல் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சீமானின் பிறந்தநாளான நவம்பர் 8 ஆம் தேதி அவருக்கு வாழ்த்து சொன்னார். அதற்கு முன்னதாக திரையுலக முன்னோடி கமல்ஹாசன் பிறந்தநாள் வந்தது. அதற்கு வாழ்த்தோ அல்லது ஒரு பதிவோ விஜய் வெளியிடவே இல்லை. அது பலருக்கும் சந்தேகத்தை அளித்திருந்தது.
ஆனால், கமல்ஹாசனைத் தெய்வம் எனப் பேசி வந்த அவரது நெருங்கிய நண்பர் டெல்லி கணேஷ் மறைந்தபோது அது பற்றி தனது இரங்கலை விஜய் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம்தேதி தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு சம்பவம் கிண்டி மருத்துவமனையில் நடைபெற்றது. ஒரு இளைஞர் தனது தாய்க்காக அரசு மருத்துவர் ஒருவரைக் கத்தியால் குத்தினார்.
அதைக் கண்டித்துப் பல தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். பல கட்சித் தலைவர்கள் டாக்டரை நேரில் போய் சந்தித்தனர். ஆனால், விஜய் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிக்கை மட்டுமே விட்டார். சம்பவம் நடந்த இடத்திற்கோ அல்லது டாக்டரை நேரில் சந்தித்தோ ஆறுதல் எதையும் சொல்லவே இல்லை.
இதன் பின்னர் குழந்தைகள் தின வாழ்த்து, சர்வதேச பெண்கள் பாதுகாப்பு தின அறிக்கை, பிரபாகரனின் பிறந்தநாளான 25 ஆம் தேதி அவரின் பெயரைக்கூடக் குறிப்பிடாமல் மாவீரம் போற்றுதும் என்று ஒரு பதிவு என எக்ஸ் தளத்திற்குள் மட்டுமே அரசியல் கட்சியை விஜய் நடத்தி வருகிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மகாராஷ்டிரா தேர்தல் நடந்த பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜார்கண்டில் காங் கூட்டணி வென்றுள்ளது. கேரளாவில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச அளவில் அதானி மீது மிகப்பெரிய புகார் எழுந்துள்ளது. இப்படிப் பல அரசியல் விவகாரங்கள் பற்றி எந்தக் கருத்தையும் விஜய் தெரிவிக்கவே இல்லை. அது குறித்து அவரது பார்வை என்ன? கருத்து என்ன என்பது ஒன்றும் புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் சிலர்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவர் தனது தொண்டர்களுக்கு இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறார்? இப்போது சமரி மலை ஐயப்பனைப் பற்றி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அது பற்றி தவெகவின் நிலைப்பாடு என்ன? என எதற்கு விஜய்யிடம் கிடைப்பது மவுனம்தான் நிலவுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி எனக் கடந்த ஒரு மாதமாகப் பலர் பேசி வந்த நிலையில், ஒரு செய்தித்தாளில் அது வெளியான பிறகுதான் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு வெளியிடுகிறார். ஆதாரமற்ற தகவல் என்கிறார். சில மூத்த பத்திரிகையாளர்கள் எடப்பாடியை விஜய் சந்தித்தார் என யூடியூபில் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள். அதை விஜய் தரப்பு மறுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. அம்பேத்கரைத் தனது கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்துள்ளார் விஜய். இந்திய அரசியல் கட்சிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடி வருகின்றன. அது பற்றி விஜய் தனது கருத்து என்ன? நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் தானும் தனது கட்சியும் எப்படிப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்காக ஒரு விளக்கத்தையும் வெளியிடவே இல்லை.

Click it and Unblock the Notifications