திமுக தேர்தல் அறிக்கை 181-311 சொல்வது என்ன? நிதிச் சிக்கலை ஆசிரியர்களுக்கு புரிய வைத்த அரசு!
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 2 முக்கிய அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்றுவதில் உள்ள நிதிச் சிக்கல்கள் பற்றி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு அதிகாரிகள் புரிய வைத்ததை அடுத்து, அரசின் உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் விடாப்பிடியாக நின்ற சூழலில், அது தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இங்கே பார்க்கலாம்.

*''ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.''
*''பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17B பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு, மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.''
* ''பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' மேற்கண்ட இந்த உறுதிகள் தான் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளவைகள் ஆகும்.
சொன்னீர்களே செய்தீர்களா என்ற கேள்வியுடன் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். இது தான் அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியது. இருப்பினும் முடிந்த வரை அரசின் நிதி ஆதாரம் பற்றி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல மூன்று மாத காலத்தில் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியும் தரப்பட்டதால், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications