118 இல்லை.. 116 தான்! கடைசி நிமிடத்தில் வந்த ட்விஸ்ட்! ஆளுநரிடம் விஜய் கொடுத்த லெட்டரிலிருந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநரை 3வது முறையாக நேரில் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். மெஜாரிட்டிக்கு தேவையான நம்பர் உடனேயே விஜய் சென்றதாகச் சொல்லப்பட்டது. உண்மையில் விஜய்க்கு எவ்வளவு பெயர் ஆதரவு இருந்தது.. லெட்டரில் இருந்த தவெக எம்எல்ஏக்கள் கையெழுத்து எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் சினிமா போல நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய், கடந்த மூன்று நாட்களில் மூன்று முறை ஆளுநரை சந்தித்துவிட்டார். அதிலும் குறிப்பாக நேற்று மாலை அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, 'முடிந்தது கதை' என்றுதான் கோட்டை வட்டாரங்கள் நினைத்தன.

Raj bhavan TTV Dhinakaran on Vijay TTV Dhinakaran Vijay TVK

விஜய்- ஆளுநர் சந்திப்பு

விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை காட்டி உரிமை கோரிவிட்டார். சற்று நேரத்தில் ஆளுநரும் கூட ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், மிகப் பெரிய ட்விஸ்ட்டாக அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை. இதற்கிடையே விஜய்- ஆளுநர் சந்திப்பின்போது ஆளுநர் மாளிகையில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஆதரவு எவ்வளவு?

இப்போது அனைவரிடமும் உள்ள மிகப் பெரிய கேள்வியே ஒன்று தான். அதாவது ஆளுநரிடம் விஜய் கொடுத்த லெட்டரில் எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது என்பதே அது. சிலர் 116 என்றார்கள்.. சிலர் 117 என்றார்கள்.. இன்னும் சிலர் 118 என்றார்கள். இந்த குழப்பம் இணையத்தில் விவாதமாக வெடித்துள்ள சூழலில், இது தொடர்பாக சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது ஆளுநரிடம் விஜய் சமர்ப்பித்த பட்டியலில் 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.. தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய போவதால்.. அவர்கள் பலம் 108-லிருந்து 107 ஆக குறையும்), காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4) மற்றும் அமமுகவின் அந்த ஒற்றை எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோரின் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது..

டிடிவி தினகரன்

சனிக்கிழமை காலை 11 மணிக்குப் பதவியேற்பு விழா என விஜய் தரப்பு நேரம் கேட்ட அடுத்த 30வது நிமிடமே போன் காலில் வந்து நின்றார் டி.டி.வி.தினகரன்.! தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே டிடிவி தினகரன் பொதுவெளிக்கு வரவே இல்லை. ஆனால், விஜய் லெட்டர் கொடுத்தவுடன் ஆளுநர் மாளிகைக்கே போனார் டிடிவி! அந்த அமமுக எம்.எல்.ஏ-வின் கையெழுத்து போலியானது.. நாங்கள் என்.டி.ஏ கூட்டணியில்தான் உறுதியாக இருக்கிறோம் எனத் தினகரன் சொல்லி அதிர வைத்தார்.

இன்னொரு பக்கம், அமமுக எம்எல்ஏ காமராஜை தொடர்புகொள்ள தவெக தரப்பு முயன்றபோது அவர் 'நாட் ரீச்சபிள்'. சிறிது நேரத்திலேயே தினகரனுடன் ஆளுநர் மாளிகைக்கு நேரில் ஆஜரான காமராஜ், அது என் கையெழுத்தே இல்லை எனச் சொல்லி குதிரை பேரம் புகாரையும் சொன்னார். தவெக தரப்போ, அவர் ஆதரவு கடிதம் எழுதும் வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்தாலும், ஆதரவு கணக்கில் அந்த ஒரு ஓட்டு மைனஸ் ஆகி, எண்ணிக்கை 116-ல் வந்து நின்றது.

ஒரே ஆப்ஷன்

இப்போது விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் விசிக தான்.. விசிக வசம் இரு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்கள் விஜய் ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் தவெக ஆட்சி அமையும். ஆனால், விசிக தரப்போ விஜய் மீது உச்சக்கட்டக் கடுப்பில் இருக்கிறதாம். நேரில் வந்து ஆதரவு கேட்காமல், வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி ஆதரவு கேட்பது என்ன மாதிரியான போக்கு என்று விசிக தரப்பு கோபத்தில் இருக்கிறதாம்.

தற்போது நிலவரப்படி, விஜய்க்குப் பதவியேற்கப் பச்சைக்கொடி காட்ட ஆளுநர் மறுத்துவிட்டார். மெஜாரிட்டி இல்லை என்பதே காரணம்! 118 எம்.எல்.ஏ-க்களின் நேரடி கையெழுத்துடன் வாருங்கள் என்பதே ஆளுநர் சொல்வதாக இருக்கிறது. இதனால் "விஜய் என்னும் நான்.." என்ற குரலைக் கேட்க தவெகவினர் இன்னும் இரு நாட்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+