பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் கேளிக்கை மதுபான விடுதியின் மேற்கூரை திடீரென்று பெயர்ந்து விழுந்து 3 பணியாளர்கள் இறந்த நிலையில் காவல்துறை அதிகாரி விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷேக்மேட் ‛பப்' எனும் கேளிக்கை மதுபான விடுதி உள்ளது. நேற்று இரவு 7.30 மணிக்கு முதல் தளத்தில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது திடீரென்று முதல் தளத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதில் கேளிக்கை விடுதியில் பணியாற்றி வந்த பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டவர்கள் விரைந்து வந்த மீட்பு பணியை தொடங்கினர்.

இதில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் மணிப்பூரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் இடிபாடுகளுக்கு சிக்கி உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு திருச்சியை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 48), மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22) மற்றும் லில்லி (24) ஆகிய 3 பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தது தெரியவந்தது.
இறந்துபோன 3 பேரின் உடல்களும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கேளிக்கை மதுபான விடுதியின் அருகே மெட்ரோ சுரங்க பணிகள் நடக்கும் நிலையில் அதனால் ஏற்பட்ட அதிர்வால் மேற்கூரை விழுந்து இருக்கலாம் என தகவல்கள் பரவின. ஆனால் அதனை மெட்ரோ ரயில் நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது.
இதுபற்றி சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள், கலால்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுபற்றி காவல்துறை அதிகாரி கூறுகையில், ‛‛3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. முதல்தளத்தில் உள்ள மேற்கூரையின் கான்கிரீட்டின் ஒரு பகுதி அப்படியே விழுந்து விட்டது. அதன் கீழ் நின்றவர்கள் மீது மேற்கூரை விழுந்தது. அதனால் தரளைத்தில் மேற்கூரைம் விழுந்துள்ளது. தரதைளத்தில் யாரும் இல்லை.
இதற்கான காரணத்தை நாங்கள் சொல்ல முடியாது. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வுக்கு பிறகு தான் நாங்கள் அதனை சொல்ல முடியும். இந்த பப் உரிமத்துடன் தான் செயல்பட்டு வருகிறது'' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications