அண்ணாமலைக்கு எதிரான கேஸ்.. ஆளுநர் அனுமதி தரலையா? அப்போ அந்த லெட்டர்? நடந்தது என்ன? இதுதான் உண்மை!
சென்னை: அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் கவர்னர் அனுமதிக் கொடுத்ததாக தமிழக அரசியலில் கடந்த 2 நாட்களாக பரபரப்பானது. அண்ணாமலையும் ஆளுநரும் நட்பு ரீதியாக, அரசியல் ரீதியாக வேறு வேறு இல்லையே ; இருவரும் ஒரே சிந்தனையில் ஊறியவர்கள் தானே எனும் நிலையில், அண்ணாமலைக்கு எதிராக ஆளுநர் அனுமதி கொடுத்ததாக எழுந்த விவகாரத்தால் தான் அரசியலில் அதிர்ச்சிகள் தலைத்தூக்கின.
என்ன நடந்தது?: மத உணர்வுகளைத் தூண்டி இரு சமூகங்களுக்கிடையே மத மோதல்களை உருவாக்கும் வகையில் வெறுப்பு பேச்சுகளை பேசுகிறார் என்று அண்ணாமலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் பியூஸ் மனூஸ் என்பவர். இதற்காக, சில செக்சன்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த செக்சனின்படி அண்ணாமலைக்கு எதிராக ஆக்சன் எடுக்கப்பட வேண்டும் என்பது பியூஸ் தாக்கல் செய்த மனுவின் சாராம்சம்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, குறிப்பிட்ட செக்சனில் தனி நபர்கள் தாக்கல் செய்யும் மனுவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கு அரசின் அனுமதி தேவை.
அந்த வகையில், இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அரசின் அனுமதி வேண்டும் என நீதி மன்றம் தெரிவித்துவிட்டது. அதன்படி, அரசின் அனுமதியை கோரப்பட்டது.
அதனை பரிசீலித்த திமுக அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கவர்னர் அனுமதி கொடுத்து விட்டார் என்பதாக செய்திகள் பரவிவிட்டன. இதனால், தமிழக ராஜ்பவன், ' நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை ' என நேற்று தெரிவிக்கவும், 'இதென்ன கலாட்டா ? இது உண்மை ? ' என்கிற ரீதியில் விவாதங்கள் தூள் பறந்தன.
என்ன நடந்துள்ளது?: நிர்வாக ரீதியிலாக அரசு பிறப்பிக்கும் அரசாணைகள் அனைத்தும், கவர்னரின் பெயரால் தான் வெளியாகும். ஏனெனில் அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு நிர்வாகத்துக்கு கவர்னதான் தலைவர். அதனாலேயே கவர்னரின் பெயரால் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில், அண்ணாமலைக்கு எதிரான அனுமதியையும் தமிழக அரசின் பொதுத்துறை வழங்கியுள்ளது.
ஆக, அண்ணமலைக்கு எதிரான வழக்குக்கு அனுமதி தருமாறு கவர்னருக்கு தனி கோப்பு போனதாகவும், அதற்கு கவர்னர் அனுமதி தந்ததாகவும் மாதிரி செய்திகள் ரிலீசாகி விட்டது. ஆனால், அப்படி எந்த கோப்பும் தமிழக அரசால் அனுப்பப்படவில்லை ; அதற்குத் தேவையும் இல்லை. அதனால் தான் இது குறித்து எந்த கோப்பும் தமக்கு வராத போது, நாம் அனுமதி கொடுத்தது போல ஏன் செய்தி பரவுகிறது ? என்பதால் தான், நேற்று கவர்னர் மாளிகை, ப்ரஸ் ரிலீஸ் ஒன்றை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார்கள்.
ஆக, கவர்னர் பெயரால் ஆர்டரை அரசு ரிலீஸ் செய்வது ரொட்டின் வொர்க் தவிர வேறில்லை.
அண்ணாமலை தனது பேச்சில் சில தலைவர்களின் பெயரை பயன்படுத்தினார். சம்மந்தப்பட்ட அந்த தலைவர்கள் மறைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் உயிரோடு இருந்து அண்ணாமலைக்கு எதிராக அவர், இதே செக்சன்களைச் சுட்டிக்காட்டி வழக்குத் தொடர்ந்திருந்தால், அப்போது அரசின் அனுமதி தேவையில்லை.
ஆனால் இங்கு, அண்ணாமலையின் பேச்சில் சுட்டிக்காட்டப்பட்ட தலைவர்கள் யாரும் வழக்குப் போடவில்லை. மாறாக, சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத தனி நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பொது நல வழக்காக அவர் போடவில்லை. மிக முக்கியமான சட்டப்பிரிவுகளைச் சுட்டிக்காட்டி தனிநபர் வழக்கு தொடர்ந்ததினால் தான் , அரசின் அனுமதி தேவைப்பட்டது. அதைத்தான் நீதிமன்றம் செய்திருக்கிறது,
பொதுவாக, இப்படிப்பட்ட அரசாணைகள் அரசின் உள்துறையில் இருந்து போடப்பட்டும் . தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுத்துறையிடமிருந்து அரசாணை ரிலீஸானது. அதனால், அரசு அனுமதி கொடுத்த விபரமும், நாங்கள் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என ராஜ்பவன் சொன்னதும்... இரண்டும் சரிதான். இதில் யாரோ ஒருவர் குழப்பி முதலில் செய்தியை போட்டதால், அது தீ மாதிரி பரவிவிட்டது
-
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications